திரையுலகைப் பரபரக்க வைத்த மாநாடு ரிலீஸ் அறிவிப்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தை […]

‘லாபம்’ பார்க்கலாம்!

பொருளாதார அதிகாரமே அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கின்ற நவீன கார்ப்பரேட் உலகமயச் சூழலில் ‘தொழிலாளர் ஒற்றுமை’ எனும் கம்யூனிச அரிவாளை தனது திரைப்படைப்பில் கூர் தீட்டி தந்து விட்டுப் போயிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். தோழர் பி.எஸ்.ஆர் (பி.சீனிவாசராவ்) பெயரிலான சங்கம், கூட்டுப் பண்ணை விவசாயம், தலித் மக்களுக்கான நில உரிமை என 1970களுக்கு முந்தைய கீழத்தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட்டுகளின் முன்னெடுப்புகளை இன்றைய சூழலுக்கேற்ப முன்மொழிகிறது ‘லாபம்”. தென்பரையில் தோழர் பி.எஸ்.ஆர் கட்டமைத்த விவசாயிகள் சங்கத்திற்கும் வெண்மணியில் ஒரே குடிசைக்குள் […]

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – டோணிக்கு முக்கிய பொறுப்பு!

டெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்-2), இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா (குரூப்-1) ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் இருந்து விளையாடும். இலங்கை, வங்காள தேசம், அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் […]

3 ஆண்டுகளில் சசிகலாவின் ரூ 2000 கோடி சொத்துகள் முடக்கம்!

சென்னை: சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 187 இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து 5 நாட்கள் நடந்த சோதனையில் சசிகலா குடும்பத்தினர் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர். அத்துடன், சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் வருமான […]

புலவர் புலமைப்பித்தன்!

கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலிக்குப் பிறகு, மிகப் பிடித்த பாடலாசிரியர், புலவர் புலமைப்பித்தன்தான். அவரது பாடல்கள் அனைத்துமே தனித்துவமும் கவிச்சுவையும் மிக்கவை. அவர் எழுதிய முதல்பாடலே ‘நான் யார் நான் யார்… நீ யார்’ என குடியிருந்த கோயில் படத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக எழுதியதுதான். அதன் பிறகு எம்ஜிஆருக்கு அவர் எழுதிய அத்தனைப் பாடல்களும் தித்திக்கும் தேன் என்றால் சற்றும் மிகையல்ல! ஒரு சின்ன லிஸ்ட் பாருங்கள்… ஆயிரம் நிலவே வா… எங்கே அவள்… பாடும் […]

தலிபான் ஆட்சியில் ஆப்கனில் எப்படி இருக்கிறது மக்கள் நிலை?

  காபூல்: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டன. இப்போது முழுக்க முழுக்க தலிபான்களின் கட்டுப்பாட்டில், ஆட்சியில் உள்ளது அந்நாடு. தலிபான்கள் ஆட்சியில் ஆப்கன் மக்கள் எப்படி உள்ளனர்? ‘அடிப்படைச் சுதந்திரத்தை இழந்து, உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர்’ என்பதுதான் இப்போதைக்கு அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள். மக்களை தலிபான்கள் தினம் தினம் தாக்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆப்கன் மக்களில் பெரும்பாலானோர் எப்படியாவது வேறு நாட்டுக்கு – அமெரிக்கா என்றல்ல, பக்கத்தில் உள்ள உஸ்பெக்கிஸ்தான் […]

நீட் 2021 அனுமதி அட்டை வெளியீடு!

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே […]

4வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி… 2-1 முன்னிலை!

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சதமும் (127 ரன்கள்), புஜாரா (61 ரன்கள்), ரிஷாப் பண்ட் (50 ரன்கள்), ஷர்துல் […]

இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகம்!

  தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி இயக்குநராக உள்ள ஷங்கர் மகள் அதிதி, புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு விருமன் என்று தலைப்பிட்டுள்ளனர். குட்டிப் புலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் இந்தப் படத்தில், அதிதியின் கதாபாத்திரம் வீரம் கொண்ட கனமான கதாபாத்திரமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்துக்காக அதிதி நடிப்பு பயிற்சிகள் எடுத்து தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார். விருமன் படத்தை நடிகர் […]

தடை நீங்கியது… மீண்டும் பிஸியாகும் வடிவேலு!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சினையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக படங்களில் அவர் நடிக்கவில்லை. தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு தடை விலக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வடிவேல் மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தயாராகி உள்ளார். இதுகுறித்து வடிவேல் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு நடிப்பதற்கு விதித்திருந்த தடையை நீக்கியது மகிழ்ச்சி. இது எனக்கு மறுபிறவி, அடுத்து 5 படங்களில் நடிக்க இருக்கிறேன். […]