நடிகர் விஜய், தான் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சிக்கு, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயரிட்டு, அதனை இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்னும் நிலையில், பொது வாழ்வில் அக்கறை கொண்டு அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் விஜய் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்! ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் வள்ளுவர் வாக்கை முன்னிறுத்தி இருப்பது நமக்கு மகிழ்ச்சி தருகிறது! அவர் விடுத்துள்ள அறிக்கையை ஊன்றிப் படித்த போது, […]
Category Archives: சிறப்புக் கட்டுரை
விலகி நில்லுங்கள்… பிரேமலதா!
‘கேப்டன்’ விஜயகாந்த் மறைந்து விட்டார். மறைந்தவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல… மறைந்தவர்களின் சரி, தவறுகளில் இருந்துதான் எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். விஜயகாந்த் ஒரு சினிமா நட்சத்திரத்திற்குரிய பலம், பலவீனங்கள் நிறைந்தவர்தான். அவர் தனிப்பட்ட வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. அரசியல் கட்சி ஆரம்பித்தபோது அந்த கட்சிக்கு தனியான கொள்கையோ, நீடித்த லட்சியமோ இருந்ததில்லை. சாதாரண ரைஸ் மில் உரிமையாளரான தனக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற ஒரு எண்ணம் […]
பெருவெடிப்பின் முதல் ஓசை!
சர்வாதிகாரத்தையும், பாசிசத்தையும் வீழ்த்துவது அத்தனை எளிதன்று, கடினம் தான்! ஆனாலும் அவற்றைக் காலம் வீழ்த்தியே தீரும்! வரலாறு முழுவதும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது!! கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவில் அப்படிப்பட்ட ஓர் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் அடிப்படை வேலைத் திட்டங்களாக, வரலாற்றைத் திரித்தல், மதவாதத்தை அரியணை ஏற்றுதல், சமூக நீதியைக் குலைத்தல், மாநிலங்களை அடிமைகளாக நடத்துதல், இந்தியாவின் பன்மைத்துவத்தை அழித்தல் ஆகியன இருக்கின்றன! இந்த வேலைத் திட்டங்களை அவர்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்து […]
கல்கியின் பொன்னியின் செல்வன் அத்தனை நேர்த்தியாகவா படமாக்கப்பட்டிருக்கிறது?
பொன்னியின் செல்வன் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இணைய வெளியெங்கும் பொன்னியின் செல்வன் விமர்சனங்களே ஆதிக்கம் செலுத்துகிறது. பெரும்பாலும் வியப்பு கலந்த பாராட்டுகள்.. கொஞ்சம் எதிர்மறை… அவற்றில் பெருமளவு வன்மம். இந்த வன்மம் கலைக்கே ஆபத்தானது. ஒருவித மனநோய். சமூக ஊடகங்களில் இவர்களின் ஆதிக்கமே அதிகம்! சரி, கல்கியின் பொன்னியின் செல்வனை மணிரத்னம் படமாக்கிய விதத்தில் குறைகளே இல்லையா… இருக்கின்றன. குந்தவை – வந்தியத்தேவன் பழையாறைச் சந்திப்பின்போது, அப்போதுதான் முதன்முதலில் பார்த்துக் கொள்வதைப் போல இருவரின் பேச்சும் […]
நட்சத்திரம் நகர்கிறது ஒரு பார்வை
மேலும் கீழும் பூச்சில்லாமல் சிந்தல், சிதறலின்றி தனது அரசியல் பார்வையை திட்டவட்டமாக முன்வைக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித், “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் மூலம். காதலே ஓர் அரசியல்தான் என்கிறது படம். “வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழிந்துவிடும் என்று சொல்பவர்களை எனக்கு ஆகாது” என்கிறார் கதையின் நாயகி துஷாரா, ஒரு காட்சியில். இன்னொரு காட்சியில் “நீங்கள் கம்யூனிஸ்டா?” என்று அவரிடம் கேட்கப்படுகிறது. தயக்கமோ தாமதமோ இன்றி “நான் ஒரு அம்பேத்காரிஸ்ட்” என்று பதில் வருகிறது. “போர்டிங் ஸ்கூலில்” படித்துவிட்டு […]
எல்லா கதைகளும் ஏன் விறுவிறுப்பாக நகர வேண்டும்? – இயக்குநர் வசந்த பாலன்
ஆமிர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் அண்மையில் வெளியானது. சராசரி மனிதனைவிட சற்றே குறைவான புரிதல் கொண்ட, அதே நேரம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைச் சொன்ன அந்தப் படத்தைச் சிலர் படம் மெதுவாக உள்ளது என்கிற தொனியில் விமர்சனங்கள் எழுதியிருந்தனர். இது குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் பொதுவான பார்வை ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்தக் கட்டுரை… கதை மெதுவாக நகர்கிறது என்கிற விமர்சனத்தை பொதுவாக இணையம் முழுக்க பல […]
விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றி… அடுத்தடுத்த படங்களைத் தொடங்கும் கமல் ஹாஸன்!
கமல் ஹாஸன், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் கவுரவ வேடத்தில் சூர்யா நடித்த விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ம் தேதி உலகெங்கும் வெளியானது. இதற்கு முன் கமல் நடித்த எந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்தத் தலைமுறை ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்ததால், கிட்டத்தட்ட கமல் ஹாஸனை ஒரு தலைமுறை ரசிகர்களே மறந்துவிட்ட நிலையில், மீண்டும் அதிரடியாக விக்ரம் மூலம் […]
நாகேஷுக்கு சிலை… நாகேஷ் பெயரில் சாலை! – கமல் ஹாஸனின் கோரிக்கை
தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலமாக காமெடி, குணச்சித்திரம், வில்லத்தனம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பால் அசத்தியவர் நாகேஷ். 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி காலமானார். இன்று அவருடைய நினைவு நாள். இதனை முன்னிட்டுப் பலரும் நாகேஷ் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். நாகேஷை தனது படங்களில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியவர் கமல் ஹாஸன். இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. நாகேஷை நினைவு கூர்ந்து இன்று அறிக்கை விடுத்துள்ள கமல் ஹாஸன், அரசுக்கு ஒரு வேண்டுகோளையும் […]
புலவர் புலமைப்பித்தன்!
கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலிக்குப் பிறகு, மிகப் பிடித்த பாடலாசிரியர், புலவர் புலமைப்பித்தன்தான். அவரது பாடல்கள் அனைத்துமே தனித்துவமும் கவிச்சுவையும் மிக்கவை. அவர் எழுதிய முதல்பாடலே ‘நான் யார் நான் யார்… நீ யார்’ என குடியிருந்த கோயில் படத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக எழுதியதுதான். அதன் பிறகு எம்ஜிஆருக்கு அவர் எழுதிய அத்தனைப் பாடல்களும் தித்திக்கும் தேன் என்றால் சற்றும் மிகையல்ல! ஒரு சின்ன லிஸ்ட் பாருங்கள்… ஆயிரம் நிலவே வா… எங்கே அவள்… பாடும் […]
தலிபான் ஆட்சியில் ஆப்கனில் எப்படி இருக்கிறது மக்கள் நிலை?
காபூல்: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டன. இப்போது முழுக்க முழுக்க தலிபான்களின் கட்டுப்பாட்டில், ஆட்சியில் உள்ளது அந்நாடு. தலிபான்கள் ஆட்சியில் ஆப்கன் மக்கள் எப்படி உள்ளனர்? ‘அடிப்படைச் சுதந்திரத்தை இழந்து, உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர்’ என்பதுதான் இப்போதைக்கு அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள். மக்களை தலிபான்கள் தினம் தினம் தாக்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆப்கன் மக்களில் பெரும்பாலானோர் எப்படியாவது வேறு நாட்டுக்கு – அமெரிக்கா என்றல்ல, பக்கத்தில் உள்ள உஸ்பெக்கிஸ்தான் […]