கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்! – முதல் அமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்ற பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிகபட்சமாக ஒருநாளைக்கு தொற்றால் பாதிக்கப்படுகிற வர்கள் 36 ஆயிரமாக இருந்தனர். இது 50ஆயிரமாக உயரும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் […]

டாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்? – முதலமைச்சர் பதில்

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு இன்று தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அணையின் வலது கரையில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து, மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார். தண்ணீர் திறப்பு நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் […]

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்: அமீரகம் உள்ளிட்ட 5 நாடுகள் உறுப்பினராக தேர்வு

நியூயார்க்: ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு கவுன்சில் ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும். இது உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, பன்னாட்டு தடைகளை ஏற்படுத்துவது மற்றும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. அதேபோல நிரந்தமில்லாமல் 2 ஆண்டுகள் செயலாற்றக்கூடிய 5 உறுப்பினர் நாடுகளும் […]

கனடா… கொரோனாவுக்கு மேலும் 30 பேர் பலி

டொரன்டோ: கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 477பேர் பாதிக்கப்பட்டதோடு 30பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23 ஆவது நாடாக உள்ளது கனடா. இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 98ஆயிரத்து 275பேர் இங்கு கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 25,873 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 19,255 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 795 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. […]

எச்1 பி விசா கட்டுப்பாடுகள் நீக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு, எச் 1 பி மற்றும் எச் 4 ஆகிய விசாக்கள் வழங்கப் படுகின்றன. இந்திய தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள்தான், இந்த விசாவால் அதிகம் பயனடைந்தனர். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், எச் 1 பி விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதித்தார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து, எச் 1 பி விசா வழங்க, டிரம்ப் இடைக்கால […]

சீனாவில் மீண்டும் கொரோனா… 35 பேருக்கு புதிதாக தொற்று!

பீஜிங்: உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தது. மேலும் பிற நாட்டவர்கள் சீனாவுக்கு வருவதற்கும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 22 […]

பிரேசில்: ஒரே நாளில் 85,149 பேருக்கு புதிதாக கொரோனா!

பிரேசிலியா: உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதைத் தொடர்ந்து 3வது இடத்தில் தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது. கொரோனாவின் 2 அலைகளாலும் பிரேசில் மக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரேசிலில் இதுவரை பதிவு செய்யப்பட்ட […]

பாசனத்துக்காக மேட்டூர் அணை திறந்துவைத்தார் முதல் அமைச்சர் முக ஸ்டாலின்!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பயன் பெறுகிறது. தமிழகத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கு தண்ணீரை அளிப்பதில் மேட்டூர் அணையின் பங்கு மிக முக்கியமானதாகும். இந்த ஆண்டு இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி!

சென்னை: தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் மாண்வர் சேர்க்கைப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள் […]

புதுவையில் மேலும் தளர்வுகள்… மதுக்கடைகள் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி!

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த (மே) மாதம் 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. .ஆனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால் ஜூன் 1-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை மீண்டும் முழு […]