சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பல சிக்கல்களைகத் தாண்டி படம் நேற்று முன்தினம் வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் சிம்புவிக்கு இது தரமான மறுவரவு படம் என்று கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், மாநாடு படம் அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மாநாடு […]
Tag Archives: Maanaadu
மாநாடு எப்படி இருக்கு? #Maanaadu
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம். ஆரம்பமே பிரச்சினைதான். சிம்புதான் அசாதாராண தாமதங்களால் படத்தையே கைவிடுவதாக அறிக்கை விட்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஆனால் பின்னர் சிம்பு தாமாகவே முன்வந்து சமாதானக் கொடி காட்ட, படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் இடையில் இரு கொரோனா காலகட்டங்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று மாநாடு. தயாரிப்பாளர் அசரவில்லை. இயக்குநர் வெங்கட் பிரபுவும் அசாதாரணமாக உழைப்பைக் கொட்டி இந்தப் படத்தை முடித்துக் கொடுத்தார். அடுத்து பட ரிலீஸ் சிக்கல். அதைத்தான் கடந்த […]
பிரச்சினைகள் தீர்ந்து, ஒருவழியாக வெளியானது மாநாடு!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, தள்ளிப்போனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (இன்று) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. நிதிப் பிரச்சினை காரணமாக பட வெளியீட்டுக்கு பல முட்டுக் கட்டைகள் விழுந்தன. இந்நிலையில், மாநாடு திரைப்படம் இன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்து […]
மாநாடு…. அமெரிக்காவில் 200க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகும் முதல் சிம்பு படம்!
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையில் மாநாடு திரைப்படம் உலகம் முழுக்க நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் பிரிமியர் காட்சிகள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட அரங்குகளில் இன்று திரையிடப்படுகிறது. அமெரிக்காவில் இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் சிம்பு படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அமெரிக்கா முழுவதும் கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அமெரிக்க திரையரங்குகள் பட்டியல்:
‘இப்படி செஞ்சா ஒருத்தர்கூட தியேட்டர் பக்கமே வரமாட்டங்க முதல்வரே!’ – மாநாடு தயாரிப்பாளர்
சென்னை: மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்தே மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. ஐம்பது விழுக்காடு இருக்கை ஆக்கிரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் […]
மாநாடு தீபாவளிக்கு இல்லை…. நவம்பர் 25-ம் தேதி வெளியாகிறது!
வரும் தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்துடன் சிம்பு நடித்துள்ள மாநாடு படமும் வெளியாகும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. மாநாடு படத்தை தீபாவளிக்கு திரையிடும் அனைத்து வேலைகளையும் மும்முரமாகச் செய்து வந்தனர் படக்குழுவினர். படத்தின் சர்வதேச வியாபாரமும் முடிந்த நிலையில், படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறி்க்கை: “திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்… நீடித்த […]
திரையுலகைப் பரபரக்க வைத்த மாநாடு ரிலீஸ் அறிவிப்பு!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தை […]