இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை உடைக்கிறார் மோடி! – ராகுல் காந்தி

டெல்லி: இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை உடைக்கிறார். இந்தியர்களுக்கு இடையேயான உறவை அவர் உடைக்கிறார் என்றால் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படைக் கருத்தையே அவர் உடைக்கிறார். இதன் காரணமாகவே நான் அவரை எதிர்க்கிறேன். இந்திய மக்களிடையே ஒரு பிணைப்பு பாலத்தை உருவாக்குவது எனது கடமை, வேலை […]

மோடியைப் புகழ்ந்ததாக வந்த செய்தி போலியானது! – நியூயார்க் டைம்ஸ் விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல நாளிதழான ’தி நியூயார்க் டைம்ஸ்’ முகப்பு பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியைப் புகழ்ந்து செய்தி வெளியிட்டதாக சமூகவலைதளத்தில் படங்கள், செய்திகள் பரவின. அதில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தனது முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டு அதில், ‘உலகின் கடைசி மற்றும் நம்பிக்கை என்று குறிப்பிட்டு, உலகின் அதிக நபர்களால் விரும்பப்படும் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் நம்மை வாழ்த்த இங்கு வந்துள்ளார்’ என தெரிவிப்பது போன்ற புகைபடங்கள் சமூகவலைதளத்தில் […]

‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்பட இசை வெளியீடு!

சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. ஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள, இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா, அபி அன்ட் அபி சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமாஸில் நடந்தது. இந்நிகழ்வில் […]

ஆறாம் நிலம் – ஒரு பார்வை

ஈழத்தின் பிற்போர்கால வாழ்வின் ஒரு பகுதியை அப்படியே பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட பெருநிலத்தில் அவற்றை அகற்றும் பணியினைச் செய்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஒரு அமைப்பின் கீழ் செயல்படும் அக்குழுவின் செயல்பாடுகளை வைத்துத் துவங்கும் இக்கதை மெல்ல மெல்ல இலங்கை யுத்தத்தின் பாதிப்புகளை எல்லா கோணத்திலும் பேச முயன்றிருக்கிறது. கதையும் களமும் அதில் நடித்திருக்கும் பெரும்பாலன மனிதர்களும் போரின் வடுக்களைச் சுமந்தவர்கள். மலைமகள் பாத்திரமும் அந்த குழந்தையும் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது. மன்மதன் […]

கான்ட்ராக்டர் நேசமணி… தொடங்கியது படப்பிடிப்பு!

நடிகர் யோகிபாபுவும், நடிகை ஓவியாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.. யோகிபாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் இந்தப் பெயர் அடிபட, #PrayforNesamani என்ற […]

நாகேஷுக்கு சிலை… நாகேஷ் பெயரில் சாலை! – கமல் ஹாஸனின் கோரிக்கை

தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலமாக காமெடி, குணச்சித்திரம், வில்லத்தனம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பால் அசத்தியவர் நாகேஷ். 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி காலமானார். இன்று அவருடைய நினைவு நாள். இதனை முன்னிட்டுப் பலரும் நாகேஷ் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். நாகேஷை தனது படங்களில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியவர் கமல் ஹாஸன். இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. நாகேஷை நினைவு கூர்ந்து இன்று அறிக்கை விடுத்துள்ள கமல் ஹாஸன், அரசுக்கு ஒரு வேண்டுகோளையும் […]

விஜய்யின் 66வது படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாகார்ஜூன், கார்த்தி இணைந்து நடித்த ‘தோழா’வை இயக்கிய வம்சி பைடிபள்ளி இந்தப் படத்தை இயக்குகிறார். தெலுங்கு, தமிழில் வெளியாகும் இப்படத்தை தில் ராஜூ, சிரிஷ் இருவரும் தயாரிக்கின்றனர். தசரா பூஜையின் ஒரு நாளில், ‘விஜய் 66’ பட பூஜையும் நடக்கிறது. அன்று சென்டிமென்டாக ஒரு காட்சியை மட்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். பின்னர் சென்னை, மற்றும் ஹைதராபாத் தவிர, வெளிநாட்டிலும் படமாக்க உள்ளனர். இந்தாண்டு நவம்பருக்குள் ‘பீஸ்ட்’டை முழுவதும் முடித்து கொடுத்துவிடும் விஜய், பிப்ரவரியில் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். […]

‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’!

லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சு குரியன் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பாடகர் மனோ, நடிகர் மா கா பா ஆனந்த், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா […]

‘இது ஒரு நாடு… இது ஒரு தேர்வு… சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!’ – கமல் ஹாஸன்

            மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துவருகின்றனர். […]

அரியலூரில் நீட் கொடூரம்…. மாணவி தூக்கிட்டு தற்கொலை!

அரியலூர்: மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துவருகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய அரியலூர் […]