டெல்லி: பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பில் இருந்து ராகுல் காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவதூறு வழக்கில் குஜராத் உள்ளூர் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நாடாளுமன்ற செயலகம் தடாலடியாகப் பறித்துள்ளது. இந்த நடவடிக்கை, நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளில் இருந்து (மார்ச்.23) அமலுக்கு வந்துள்ளது. இதில் ராகுல் காந்திக்கு சட்ட நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுல் காந்திக்கு தண்டனை காலமான […]
Category Archives: நம்ம நாட்ல
காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி!
டெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் இத்தேர்தலில் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து […]
உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மரணம்
குருகிராம்: உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆக்சிஜன் அளவும் அவருக்கு குறைந்தது. இதனை தொடர்ந்து, அவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவரது மகன் மற்றும் […]
14 வது நாளாக நடைப் பயணத்தைத் தொடரும் ராகுல் காந்தி!
கொச்சி: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. தொடங்கினார். கன்னியாகுமரியிலிருந்து இந்தப் பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று 13-வது நாளாக கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பாதயாத்திரை சென்றார். இந்தநிலையில் இன்று 14வது நாளாக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் காலை நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நடைபயணத்தின் போது கேரள மக்கள் ராகுல் காந்திக்கு […]
ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம்… கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தே செல்கிறார்!
அகஸ்தீஸ்வரம்: நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார். ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்தார். பின்னர் நேற்று காலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு அவர் சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். அங்கு மரக்கன்று நட்டதோடு, […]
பாஜகவை ஆட்டம் காண வைத்த நிதீஷ் குமார்!
பாட்னா: பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். ஆனால் பா.ஜனதாவுக்கு 77 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா அதிக இடங்களில் வென்றாலும் தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் முதல் அமைச்சர் ஆனார். கூட்டணி கட்சிகள் என்றாலும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா இடையிலான உறவு ஆரம்பத்திலிருந்தே சீராக இல்லை. பீகார் மாநில பா.ஜனதா தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ் […]
2, 3 பணக்காரர்களுக்காக மட்டுமே நடக்கும் சர்வாதிகார ஆட்சி இது! – ராகுல் காந்தி
டெல்லி: விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத் துறை சோதனையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து காங்கிரசார் மனு கொடுக்கக் குவிந்தனர். இன்னொரு பக்கம் பிரதமர் மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்துக்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவானது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் […]
‘அமைச்சரவை முடிவுக்கு எதிராக செயல்பட ஆளுநருக்கு அதிகாரமில்லை!’ – உச்ச நீதிமன்றம் சவுக்கடி
டெல்லி: அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் முடிவு எடுப்பது தொடர்பாகவும், ஆளுநரிடம் கோப்புகள் தேங்கி நிற்பது தொடர்பாகவும், பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்ற நீதிபகள் தெரிவித்துள்ளனர். “இந்த விவகாரத்தில் மிக விரைவாக ஆளுநர் முடிவை எடுக்க வேண்டும் என கடந்த முறை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அதன் மீதான பதில் […]
15 நாட்களில் 13 முறை உயர்த்தப்பட்ட பெட்ரோல் – டீசல் விலை!
டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட கிட்டத்தட்ட 2 மடங்குக்கு மேல் எரிபொருட்களில் விலையை பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் உயர்த்திவிட்டது. ஒவ்வொரு முறை விலையை உயர்த்தும்போதெல்லாம் கூசாமல் பழியை முந்தைய காங்கிரஸ் அரசு மீது போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும். வடக்கில் 5 மாநில தேர்தல் நேரத்தில் கிட்டத்தட்ட 137 நாட்களாக பெட்ரோலியப் பொருட்களின் […]
3 வேளாண் சட்டங்களும் ரத்து… பிரதமர் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரைவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில் ‘வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021’ இடம்பெற்று உள்ளது. இதன்மூலம், இம்மாதம் 29ம்தேதி தொடங்க உள்ள மக்களவையின் குளிர்கால […]