பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்

: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 60. முன்னணி நகைச்சுவை நடிகர்கள் சந்தானம், யோகி பாபு l உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. கடந்த மார்ச் 15ம் தேதி, மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேஷு […]

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்… லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பலங்க முறை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். முதலில் அவரது வீடு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் பின்னர் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சென்னை தீவுத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான […]

நடிகை மீனாவின் கணவர் மரணம்

தமிழ் திரையுலகின் முதல் நிலை நடிகையாகத் திகழ்ந்தவர் மீனா. ரஜினிகாந்த், கமல் ஹாஸன் உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்து உச்சத்தில் இருந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த கணிப்பொறியாளர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா. திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்தியிருந்த மீனா, சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நடிப்பைத் ,தொடர்ந்தார். த்ரிஷ்யம், அண்ணாத்த போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடி்த்தார். […]

பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் மரணம்!

கொல்கத்தா: பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (வயது 53), கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தியத் திரையுலகின் பல்மொழிப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் […]

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம்!

டெல்லி: இந்தியாவில் 80 மற்றும் 90-களில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்திய இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனையில் இருந்த லஹிரி நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நள்ளிரவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பை கிரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி […]

அமெரிக்கா… ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு மேல் தொற்று… 2000ஐத் தாண்டியது மரணம்!

வாஷிங்டன்: 2020-ல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே, அதிக பாதிப்புக்குள்ளானது அமெரிக்காதான். அங்குதான் அதிவேகமாகப் பரவத் தொடங்கியது கோவிட் 19 எனும் கொரோனா. பின்னர் 2021-ல் டெல்டா வைரஸ் பரவியபோதும், பாதிப்பில் முதலிடத்தில் இருந்தது அமெரிக்காதான். இப்போது கொரோனாவின் மூன்றாவது திரிபான ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸின் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இந்த நாடுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரு […]

கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்

பெங்களூரு: கன்னட திரை உலகில் பிரபல கதாநாயகனாகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன். புனித் ராஜ்குமாரை கர்நாடக மக்கள் செல்லமாக ‘அப்பு‘ என்று அழைத்து வருகிறார்கள். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமார். உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை […]

புலவர் புலமைப்பித்தன்!

கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலிக்குப் பிறகு, மிகப் பிடித்த பாடலாசிரியர், புலவர் புலமைப்பித்தன்தான். அவரது பாடல்கள் அனைத்துமே தனித்துவமும் கவிச்சுவையும் மிக்கவை. அவர் எழுதிய முதல்பாடலே ‘நான் யார் நான் யார்… நீ யார்’ என குடியிருந்த கோயில் படத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக எழுதியதுதான். அதன் பிறகு எம்ஜிஆருக்கு அவர் எழுதிய அத்தனைப் பாடல்களும் தித்திக்கும் தேன் என்றால் சற்றும் மிகையல்ல! ஒரு சின்ன லிஸ்ட் பாருங்கள்… ஆயிரம் நிலவே வா… எங்கே அவள்… பாடும் […]

நடிகர் விவேக் காலமானார்!

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்றார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. […]

பிரபல கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்

சென்னை: சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். 81 வயதான அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வானொலியில் தமிழ்நாடு – கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை செய்தார். வானொலியில் அவரது வர்ணனையை கேட்ட பலரும் அவரது குரலுக்கு அடிமையாகினர். அதன்பிறகு ஈஎஸ்பின், நியோ ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டுத் தொலைக்காட்சிகளிலும் தமிழ் […]