கர்நாடக இசை மேதை ஒருவரின் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள், ஏற்படும் சிக்கல்கள் அவற்றிலிருந்து அந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதை வைத்து பின்னப்பட்ட கதை இந்த சாருகேசி. ஒய் ஜி மகேந்திரன் குழு பலமுறை மேடை ஏற்றிய நாடகம்தான், அதே பெயரில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் படமாக வந்திருக்கிறது. சிந்து பைரவி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதா என்பதுதான் கேள்வி இசை மேதையாக ஒய் ஜி மகேந்திரன். அவரது இணையாக […]
Category Archives: விமர்சனம்
டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) விமர்சனம்
ஒரு உடம்பில் இரு உயிர்கள்.. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், இரவு முழுக்க ஆணாகவும் மாறிவிடும் வினோத உடல் அமைப்பு. இவருக்கும் ஒரே பெயர். ரஜினி. பெண் ரஜினியை பகலில் வினோத் காதலிக்க, ஆண் ரஜினியை இரவில் காதலிக்கிறார் சம்யுக்தா. Oru கட்டத்தில் ரஜினி என்பவர் ஒரே உடல்தான் என்பது தெரிய வருகிறது. எப்படி சிக்கல் தீர்கிறது என்பது கிளைமேக்ஸ். தமிழுக்கு வித்தியாசம் கதை. ஆனால் சினிமாவில் ஏற்கெனவே முயற்சித்துப் […]
வீர வணக்கம் பட விமர்சனம்
நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன், சி ஜே குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் தயாரிப்பு: விசாரத் கிரியேஷன்ஸ் இயக்கம்: அனில் வி நாகேந்திரன் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் கம்யூனிச இயக்கம் எப்படி உருவானது, அதற்கு அடித்தளமிட்ட தலைவர்கள் பற்றிச் சொல்லும் திரைப்படம் வீர வணக்கம். கம்யூனிச இயக்கத்தின் அடித்தளமாகக் திகழ்ந்த புரட்சி வீரர் பி […]
முஃபாசா தி லயன் கிங் விமர்சனம்
தி லயன் கிங் படம், அதில் வரும் சிம்பாவை அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். இந்தப் படத்தில் வரும் சிம்பா சிங்கத்தின் அப்பாவான முஃபாசா சிங்கம் எப்படி அந்த காட்டுக்கு அரசன் ஆனது என்ற கதைதான் இந்த முஃபாசா: தி லயன் கிங். லயன் கிஞை விட, இந்த முஃபாசா பல madangumembattathaaga உள்ளது. படத்தின் லைவ் ஆக்ஷன் தொழில்நுட்பமும், 3டியும் உண்மையான காட்டிற்குள் சென்று சிங்கங்களை நேரில் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. அர்ஜுன் தாஸ், நாசர், […]
மின்மினி பட விமர்சனம்
ஊட்டி பள்ளியில் படிக்கும் எதிரும் புதிருமான இரு மாணவர்கள், ஒரு கட்டத்தில் நட்பாக முயல்கிறார்கள். அப்போது இருவரில் ஒருவன் மூளைச் சாவடைகிறான். அவனது இதயம் ஒரு பெண்ணுக்குப் பொருத்தபடுகிறது. அந்தப் பெண்ணும் பள்ளி சேர்கிறாள். தனக்கு இதயம் கொடுத்தவனின் நண்பனுக்கு உதவ முற்படுகிறாள். ஆனால் அவன் பள்ளியை விட்டு விலகி விடுகிறான். இருவரும் பின்னர் இமயமலையில் சந்திக்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதி. உண்மையில், படத்தின் கதை என்ன… படம் எப்படி இருக்கும்..? என்றெல்லாம் […]
லாந்தர் பட விமர்சனம்
கோவை நகரின் உதவி காவல் ஆணையர் விதார்த். ஒருநாள் இரவில் மழைகோட்டு அணிந்த மர்ம மனிதன் சாலையில் எதிர்ப்படுபவரை எல்லாம் கொடூரமாகத் தாக்கும் தகவல் விதார்துக்குக் கிடைக்க, அந்த மனிதனைப் பிடிக்கக் களமிறங்குகிறார். அந்த காரியத்தில் அவர் வென்றாரா என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை. உள்ளே ஒரு பெரிய பிளாஷ்பேக்கும் உண்டு. இரவு நேர கோவையின் காட்சி, ஒரு பெரிய சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான கோணங்கள், இசை என விறுவிறுப்பாகத்தான் ஆரம்பிக்கிறது படம். ஆனால் போகப் போக ஜவ்வாய் […]
பயமறியா பிரம்மை பட விமர்சனம்
உணர்வுகளை எழுத்தில் வடிக்கும் ஒரு எழுத்தாளனுக்கும், சிறைக்குள்ளிருக்கும் ஒரு கொலைகாரனுக்கும் இடையிலான உரையாடல்தான் இந்த பயமறியா பிரம்மை எனும் ஒன்றரை மணி நேரப் படம். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான கபிலன், 25 ஆண்டுகளில் 96 பேரைக் கொலை செய்த சிறைக்கைதி ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையைக் கதையாக எழுத அவரை சிறையில் சந்திக்கிறார். அங்கே தன்னுடைய எழுத்துகளைப் படைப்புகள் எனக் கபிலன் சொல்ல, தன்னுடைய கொலைகளும் ஒருவிதத்தில் படைப்புகள்தான் என ஒவ்வொரு கொலைகளாக விளக்குகிறார் ஜெகதீஷ். […]
ரயில் பட அனுபவம்
ரயில் பயணங்கள்தான் பால்ய காலத்தின் அதிசயம். மரங்கள் ஏன் ஓடுகின்றன என்று கேள்வி எழுந்த பருவம். எப்போதும் நமக்கு ரயில்தான் புதிய மனிதர்களை, புதிய பிரதேசங்களை, புதிய வாழ்க்கையை காட்டிக்கொண்டே இருக்கிறது. ரயில் பயணம், வற்றாத நதியாக வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும். டிஸ்கவரி சினிமாஸ் வேடியப்பன் தயாரிப்பாளராகவும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராகவும் அறிமுகமாகும் திரைப்படம் ரயில். பிழைப்புக்காக புலம் பெயரும் வடமாநிலத் தொழிலாளர்களால் தமிழ் மண்ணில், தமிழ் மனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை அழகிய காட்சிகளுடன் […]
மகாராஜா… இப்படியும் ஒரு பார்வை
படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஒரு பக்கம் ஃபீல் குட் பிளாக்பஸ்டர் என டிக்ளேர் செய்துவிட்டார்கள். இன்னொருபக்கம் glorifying extra judicial murders என அதீத அறம் சார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். படத்தில் எனக்கு சிக்கலாக இருந்த இடங்களை பேசிவிடலாம் என நினைக்கிறேன். பாலியல் ரீதியான குற்றங்களை மையப்படுத்தி உலக அளவில் பல படங்கள் வந்து கொண்டிருக்கும் காலமிது. அதிலும் குட் டச் பேட் டச் கூட அறியாத குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை […]
வெப்பன் பட விமர்சனம்
சூப்பர் ஹ்யூமன் அதாவது அதிசய சக்தி மிக்க மனிதனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் வெப்பன் (Weapon). அதாவது ஹாலிவுட் படங்களில் வரும் அதி உச்ச நாயகன் பாத்திரத்தை மையப்படுத்தி தமிழில் ஒரு முயற்சி செய்திருக்கிறார்கள். தொடக்கமே சற்று வித்தியாசமாகத்தான் யோசித்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, யாராலும் அழிக்க முடியாத வீரர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது ஹிட்லரின் நாஜிப் படை அதில் பங்கேற்கும் ஒரு தமிழர், அந்த அதிசய மனிதர்களை உருவாக்கும் திறன்மிக்க திரவத்தை எடுத்துக் கொண்டு […]