வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவ்வாறு தெரிவித்துள்ளார்:

“நிறைவான மகிழ்வில் ‘மாநாடு’ படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம்.
படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இத்தனை நாட்கள் பேரன்போடு இப்படத்தை தாங்கிக் கொண்ட அனைவருக்கும் நன்றிகள். உங்கள் ஆதரவோடு வருகிறோம். வெல்வோம்.”

தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வெளியாவது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. அஜித் நடித்துள்ள வலிமை படமும் தீபாவளிக்குதான் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன. இந்த நிலையில் ரஜினி, அஜித் படங்களுக்குப் போட்டியாக சிம்புவின் மாநாடும் களத்தில் குதித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *