தனி ஒரு மனிதனின் ONE MAN!

ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார் ராஜ்குமார். ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் […]

தமிழ்த்தாய் வாழ்த்துக் முதலிடம்! – தனித் தீர்மானம்

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று முதல்வர் முன்மொழிந்த தீர்மானம், சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு இன்று (ஆகஸ்ட் 10) தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை கொண்டு வந்து சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: மொழி எப்பொழுதும் தொடர்புக்கான ஒன்று தான்; இல்லை என்று யாரும் மறுக்கவே முடியாது. […]

மிரட்டிவிட்ட யாஷின் டாக்ஸிக்’ டிரெய்லர்!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’  ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் தனித்துவமான கதை என, இப்படத்தின் உலகத்தை முதன்முறையாக இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்தின் டிரெய்லர், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மிகப்பெரிய திரை அனுபவத்துடன், காதல், […]

செல்போனுடன் செலவிடும் நேரத்தைக் குறையுங்கள்! – நடிகர் சூர்யா

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments )  – ஃபார்ச்சூன் […]

ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’!

ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய ‘பாகுபலி’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ளார். இந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். […]

சமந்தா நடிக்கும் எங்கள் தங்கம் பிரஸ் மீட் – என்ன பேசினாங்க?

பிரபல தயாரிப்பாளரான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள எங்கள் தங்கம் திரைப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழு கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். ஒளிப்பதிவு இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது, “இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு மிகவும் மகிழ்ச்சி. இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். […]

சாருகேசி பட விமர்சனம்

கர்நாடக இசை மேதை ஒருவரின் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள், ஏற்படும் சிக்கல்கள் அவற்றிலிருந்து அந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதை வைத்து பின்னப்பட்ட கதை இந்த சாருகேசி. ஒய் ஜி மகேந்திரன் குழு பலமுறை மேடை ஏற்றிய நாடகம்தான், அதே பெயரில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் படமாக வந்திருக்கிறது. சிந்து பைரவி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதா என்பதுதான் கேள்வி இசை மேதையாக ஒய் ஜி மகேந்திரன். அவரது இணையாக […]

Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

முதலில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி- அவரது நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம் வசூலுக்கான சாதனை களத்தை அமைத்தார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. சில மாதங்களுக்கு பிறகு சிரஞ்சீவியின் மகனும், ‘மெகா பவர் ஸ்டார்’ என ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவருமான […]

ரஜினியைச் சந்தி8தத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான புத்தகத்தை வழங்கினார். இந்த சந்திப்பு புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டிருப்பதாவது: இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்மபூஷன் ரஜினிகாந்த்தை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட […]

விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி கூட்டணியில் நூறு சாமி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஃபில் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த […]