தமிழ்த்தாய் வாழ்த்துக் முதலிடம்! – தனித் தீர்மானம்

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று முதல்வர் முன்மொழிந்த தீர்மானம், சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு இன்று (ஆகஸ்ட் 10) தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை கொண்டு வந்து சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: மொழி எப்பொழுதும் தொடர்புக்கான ஒன்று தான்; இல்லை என்று யாரும் மறுக்கவே முடியாது. […]

அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் – சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா – ‘தயா’ என். பன்னீர்செல்வம் – எம். தங்கவேல் […]

துணை முதல்வராகப் பதவி ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பதவியேற்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. அமலாக்கத் துறை […]

பாஜக வுக்கு துணை போகிறமாதிரி கேட்கலாமா? – பா இரஞ்சித்துக்கு திமுக கேள்வி

இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் கூறியிருப்பதாவது: “திமுகவை தலித் மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சி என கட்டமைக்க பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது. அதிலே படுதோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது, சந்திக்கவும் போகிறது. அண்ணன் திரு. ஆம்ஸ்டிராங்க் அவர்கள் கொலை என்ன காரணத்திற்காக நடந்திருக்கிறது, யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே, திமுகவின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் அண்ணன் பா. ரஞ்சித் அவர்கள். அண்ணன் பா. ரஞ்சித் […]

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 35 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் யாரேனும் சிகிச்சைக்கு வராமல் இருக்கின்றனரா என வீடு வீடாகச் சென்று சோதனை செய்து அழைத்து வந்து சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதாக 109 […]

“பெரியார் சிலையை அவமதித்தால் கை இருக்காது” – வைகோ

  மதுரை: “பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது,” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரியாரின் 50 வது நினைவு தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “சமூக நீதியின் வடிவமாக பெரியார் திகழ்கிறார். பெரியாரால் உலகெங்கும் சமூக நீதி தழைத்துள்ளது. அவரை இளைஞர்கள் […]

எம்ஜிஆரின் 36வது நினைவு தினம்!

சென்னை: அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவுநாள் இன்று டிசம்பர் 24-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற […]

அஜித்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன விஜய்

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 85. நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறவால் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று காலை காலமானார். நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப […]

மாமன்னர் ராஜராஜன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! – மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்ட வரலாற்றிலேயே மிக உயர்ந்த இடத்தைபெற்ற மன்னன் ராஜராஜ சோழன். கடல் கடந்து சென்று பல நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டி, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய மாவீரன். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,037-வது சதய விழா இன்று காலை மங்கல […]

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை காக்க முன்வந்த கலைப்புலி தாணு!

சென்னை: திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ் தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார். கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு வருடங்களாக இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவரது நுரையீரலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் (TRANSTAN) பதிவும் செய்யப்பட்டு […]