ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம்… கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தே செல்கிறார்!

அகஸ்தீஸ்வரம்: நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார். ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்தார். பின்னர் நேற்று காலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு அவர் சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். அங்கு மரக்கன்று நட்டதோடு, […]

113 ஆண்டுகளில் இல்லாத பெருமழை!

  சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதியில் இயல்பை விட 93% அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில், திருநெல்வேலி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 100% க்கும் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டார். […]

அதிமுக வழக்கு… எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவாக தீர்ப்பு!

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை […]

அட கோப்ரா டீம்…. இதை ரிலீசுக்கு முன்னாடியே செஞ்சிருக்கலாமே!

டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் […]

நீட் தோல்வி பயம்…. தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!

தென்காசி: சங்கரன்கோவில் அருகேயுள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் – வெண்ணியார் தம்பதிக்கு ராஜலெட்சுமி (21) என்ற மகளும் உதயஜோதி (19) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மாணவி ராஜலட்சுமி நீட் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதி தோல்வி அடைந்ததாகவும் தற்போது 3வது முறையாக நம்பிக்கையுடன் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இந்த சூழலில் செப்டம்பர் 7 தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இந்த […]

பாடகர் பம்பா பாக்யா மரணம்!

சென்னை: பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. ஏ.ஆர்.ரகுமான் இசையில், ‘ராவணன்’ படத்தில் பாடகராக பம்பா பாக்யா அறிமுகமானார். ரஜினிகாந்தின் 2.0 படத்தின் ‘புள்ளினங்காள்’, சர்கார் படத்தின் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தின் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாடியுள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலை ஏஆர் ரகுமானுடன் சேர்ந்து பம்பா பாக்யா பாடியுள்ளார்.  பாக்யராஜ் என்ற இயற்பெயர் கொண்டவரை, […]

புதுவைக்குப் படையெடுக்கும் மக்கள்… எதுக்குத் தெரியுமா?

புதுவை: தமிழகத்தைவிட புதுவையில் பெட்ரோல் – டீசல் விலை குறைவாக இருப்பதால், மக்கள் தங்கள் வாகனங்களுடன் அங்கே படையெடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. பெட்ரோல் – டீசல் விலை கடந்த நவம்பர் மாதம் கட்டுக்கடங்காமல் உச்சத்தை தொட்டது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு கலால்வரியை குறைத்தது. அதோடு மாநிலங்கள் தங்கள் பங்குக்கு விற்பனை வரியைக் குறைத்து, பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டது. தமிழகம் உட்பட சில மாநிலங்கள் வரியை […]

குருநாதர் விக்ரமன் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தும் கேஎஸ் ரவிக்குமார்!

லிஸ்ட் படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத் துறையினர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் புது வசந்தம் தொடங்கி புதிய சரித்திரம் படைத்து பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாக காரணாமாயிருந்த இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார்.   பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனது ஆர்கே செல்லுலாயிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். […]

நட்சத்திரம் நகர்கிறது ஒரு பார்வை

மேலும் கீழும் பூச்சில்லாமல் சிந்தல், சிதறலின்றி தனது அரசியல் பார்வையை திட்டவட்டமாக முன்வைக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித், “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் மூலம். காதலே ஓர் அரசியல்தான் என்கிறது படம். “வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழிந்துவிடும் என்று சொல்பவர்களை எனக்கு ஆகாது” என்கிறார் கதையின் நாயகி துஷாரா, ஒரு காட்சியில். இன்னொரு காட்சியில் “நீங்கள் கம்யூனிஸ்டா?” என்று அவரிடம் கேட்கப்படுகிறது. தயக்கமோ தாமதமோ இன்றி “நான் ஒரு அம்பேத்காரிஸ்ட்” என்று பதில் வருகிறது. “போர்டிங் ஸ்கூலில்” படித்துவிட்டு […]

பயணங்கள் வேறாக இருந்தாலும் நாங்கள் சேருமிடம் தமிழ்நாடுதான்! – ரசிகர்களை துள்ள வைத்த இளையராஜா – ஏஆர் ரகுமான்!

சென்னை: ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா அண்மையில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு வலைவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்மையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில் இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் இன்று காலை (செப்.1) பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அந்த வீடியோவைப் பற்றி அவர், “நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் […]