மனதை வருடும் இளையராஜாவின் ‘ ஜமா ‘ பாட்டு!

இன்றைய காலகட்டத்தில் தமிழ் திரை இசை என்பது வெறும் சத்தமாகிவிட்டது என்பதுதான் இசை விரும்பிகளின் கருத்து. இந்தக் கருத்தை மாற்றும் வகையில் அவ்வப்போது சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். முன்பு ‘வழி நெடுக காட்டுமல்லி…’ வெளியாகி பரவசப்படுத்தியது. இப்போது அதற்கு இணையாக இன்னொரு பாடல் வெளியாகி உள்ளது. காட்டுமல்லி தந்த அதே இளையராஜாதான் இந்தப் பாடலையும் கொடுத்துள்ளார். நீ இருக்கும் உசரதுக்கு… என்று தொடங்கும் அந்தப் பாடலை ஜமா படத்துக்காக இளையராஜாவே எழுதி இசை அமைத்துள்ளார். […]

சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்!

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி(இந்தியததொழில்நுட்பக் கழகம்) முதல் முறையாக இசைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கப் போகிறோம் என்கிறார் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி. செ ன்னை ஐ.ஐ.டி வளாகத்துக்குள் அமையும் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மைய’த்துக்கு இளையராஜா மே 20ம் தேதி மாலை அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “மொசார்டுக்கு பிறகு 200 ஆண்டுகளாக […]

இளையராஜாவும் பாரதிராஜாவும் தமிழ் சினிமாவின் இலக்கணம்!

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பாடலாசிரியர் சிநேகன் பேசுகையில், “ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி. இந்தப் படத்தின் பாடல்களும் […]

முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த், இளையராஜா!

  சென்னை: தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மார்ச் 1-ம் தேதி வியாழன் கிழமை தனது 70 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு ஒரு நாள் முன்பாகவே வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது: “எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட […]

பயணங்கள் வேறாக இருந்தாலும் நாங்கள் சேருமிடம் தமிழ்நாடுதான்! – ரசிகர்களை துள்ள வைத்த இளையராஜா – ஏஆர் ரகுமான்!

சென்னை: ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா அண்மையில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு வலைவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்மையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில் இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் இன்று காலை (செப்.1) பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அந்த வீடியோவைப் பற்றி அவர், “நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் […]

‘இளையராஜாவிடம் ஏன் நான் போகவில்லை?’ – பா.இரஞ்சித்

  இயக்குநர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனும் படத்தை இயக்கியிருந்தார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல்ஜாசன் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ் வினோத், வின்சு , சுபத்ரா, தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். குண்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிஷோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தென்மா இசையமைத்திருக்கிறார். படம் பற்றி […]

இளையராஜாவின் சாதனைகளுக்காக குடியரசுத் தலைவர் பதவியே கொடுக்கலாம்! – கமல் ஹாஸன் நச்!!

சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். திரையுலகிலிருந்து ரஜினிகாந்த் முதல் நபராக இளையராஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் […]

இளையராஜா ‘எம்பி’-க்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பலரும் இளையராஜாவுக்கு […]

மாநிலங்களவை எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்… குவியும் வாழ்த்துகள்!

டெல்லி: விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குளில் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இளையராஜாவின் படைப்புகள் தலைமுறை தலைமுறையாக மக்களைக் கவர்ந்துள்ளன. அவரது படைப்புகள் […]

‘திரை எழுத்தின் பிதாமகன்’ பஞ்சு அருணாச்சலம் 80!

தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலம். அவரது 80 ஆண்டு விழா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா தலைமையில், தமிழ் திரையுலகின் எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொள்ள, வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை பிஏ ஆர்ட் புரொடக்சன்ஸ் மற்றும் பிளாக் ஷீப் நிறுவனங்கள் இணைந்து ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளன. இவ்விழாவிற்கு பத்திரிக்கையாளர்களை அழைக்கும் சந்திப்பில், திரைப்பிரபலங்கள் பாரதிராஜா, கலைப்புலி தாணு, கங்கை […]