இசைப் புயலும் நடனப் புயலும் இணையும் மூன் வாக்!

இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய ஏ ஆர் ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது. Behindwoods நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக பெயரில் இப்படத்தைத் துவக்கியது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென ரசிகர்கள எதிர்பார்த்து வந்த நிலையில், ‘மூன் வாக்‘ எனும் அட்டகாசமான தலைப்பை, Behindwoods நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் AR ரஹ்மான், […]

ஆடுஜீவிதம்’ கதையில் ஏதோ ஒன்று இருக்கிறது; அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்!’ – ஏ ஆர் ரஹ்மான்

ஆடுஜீவிதம்’ கதையில் ஏதோ ஒன்று இருக்கிறது; அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்!’ – ஏ ஆர் ரஹ்மான் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப் (The Goat Life)- ஆடுஜீவிதம்’ திரைப்படம் 28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை பிளெஸ்ஸி […]

ஏஆர் ரகுமான் இயக்கிய படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி!

  சென்னை: ஆஸ்கர் நாயகன் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார். முன்னதாக ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி, இசையமைத்திருந்தார். அதே போல் ‘லி மஸ்க்’ என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், மெய்நிகர் உண்மை என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மெய்நிகர் உண்மை மூலம் […]

பயணங்கள் வேறாக இருந்தாலும் நாங்கள் சேருமிடம் தமிழ்நாடுதான்! – ரசிகர்களை துள்ள வைத்த இளையராஜா – ஏஆர் ரகுமான்!

சென்னை: ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா அண்மையில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு வலைவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்மையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில் இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் இன்று காலை (செப்.1) பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அந்த வீடியோவைப் பற்றி அவர், “நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் […]

பொன்னியின் செல்வன்: வெளியானது இரண்டாவது பாடல்!

சென்னை: கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக உருவாகி வரும்இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் […]

ஏஆர் ரஹ்மானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், சர்வதேச அளவில் ஆஸ்கார், கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றார். தற்போது அடுத்த கட்டமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், […]