வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், சிலம்பரசன் டிஆர் நடித்து வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடகத் துறையினரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பேசுகையில், “படம் தமிழ்நாட்டைத் தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியைப் […]
Author Archives: Dhina Cheithi
14 வது நாளாக நடைப் பயணத்தைத் தொடரும் ராகுல் காந்தி!
கொச்சி: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. தொடங்கினார். கன்னியாகுமரியிலிருந்து இந்தப் பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று 13-வது நாளாக கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பாதயாத்திரை சென்றார். இந்தநிலையில் இன்று 14வது நாளாக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் காலை நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நடைபயணத்தின் போது கேரள மக்கள் ராகுல் காந்திக்கு […]
லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான வழக்கு… உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
டெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘கோச்சடையான்’. இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. மீடியா ஒன் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையெழுத்திட்டிருந்தார். பின்பு முரளி கடனாக […]
சினம் பட விமர்சனம்
நடிகர்கள்: அருண் விஜய், பாலக் லால்வானி ஒளிப்பதிவு: கோபிநாத் இசை: ஷப்பீர் தயாரிப்பு: ஆர் விஜயகுமார் இயக்கம்: ஜிஎன்ஆர் குமரவேலன் சென்னை புறநகர் காவல் நிலையம் ஒன்றின் நேர்மையான காவல் உதவி ஆய்வாளர் அருண் விஜய். அவருக்கு அழகான அன்பான மனைவி, ஒரு பெண் குழந்தை. மகிழ்ச்சியாகப் போகும் அவர்களின் வாழ்க்கை ஒரு நாள் சின்னாபின்னமாகிறது. அந்த அழகான மனைவி கடுத்துக் குதறி கிழிக்கப்பட்டு ஏரிக்கரை புதரில் வீசப்பட்டுக் கிடக்கிறாள். அருகே இன்னொரு ஆணின் சடலம். விசாரிக்கும் […]
வெந்து தணிந்தது காடு பட விமர்சனம்
நடிகர்கள்: சிலம்பரசன், சித்தி இட்னானி, ராதிகா ஒளிப்பதிவு: சித்தார்த்தா நுனி இசை: ஏஆர் ரகுமான் தயாரிப்பு: ஐசரி கே கணேஷ் திரைக்கதை, இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன் பிழைப்புக்காக மும்பைக்குப் போகும் தூத்துக்குடி மாவட்டத்தின் ஒ்ரு சிறுகிராமத்து இளைஞன், வாழ்க்கைப் போராட்டத்தில் பல எதிர்ப்பாராத திருப்பங்களில் சிக்குகிறான். அவற்றிலிருந்து எப்படி தப்பிக்கிறான், தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான் என்பதுதான் வெந்து தணிந்தது காடு படத்தின் ஒரு வரிக்கதை. படத்தின் விமர்சனத்துக்குப் போகும் முன், ஆங்காங்கே சில கௌதம் மேனன்தன […]
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு… எங்கு, எப்போது?
லண்டன்: பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார். பால்மோரலில் இருந்து, ஓக் மரத்தில் செய்யப்பட்ட ராணியின் சவப்பெட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை எடின்பரோ நகருக்குச் செல்லப்பட்டது. திங்கட்கிழமை பிற்பகல், அரச குடும்ப உறுப்பினர்களுடன் எடின்பரோவில் உள்ள செயின்ட் கில்ஸ் தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ராணியின் உடல்,. மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் 24 மணிநேரம் அங்கு வைக்கப்பட்டது. எடின்பரோவிலிருந்து விமானம் மூலம் லண்டன் […]
டி 20 உலகக் கோப்பை… இந்திய அணி அறிவிப்பு
மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணி வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல் ( துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், செஹல், அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங். ஸ்டாண்ட் பை வீரர்கள்: முகமது ஷமி, ஸ்ரேயஸ் அய்யர், ரவி பிஷ்னாய், தீபக் சாஹர் […]
தனுஷின் நானே வருவேன்… வெளியானது முதல் பாடல்!
நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்துள்ள இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். செல்வராகவன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். தனுஷ், யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் வெளிநாட்டு நடிகை எல்லி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அண்மையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் […]
நவம்பரில் வெளியாகும் புதுமுக நடிகர்களின் ‘பனாரஸ்’!
கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், பல விருதுகளை வென்ற படைப்பாளியுமான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் […]
‘சொப்பன சுந்தரி’ ஐஸ்வர்யா ராஜேஷ்!
வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் ‘சொப்பன சுந்தரி’ என்ற டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். ‘லாக்கப்’ படத்தை இயக்கிய […]