சென்னை: வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால், மார்ச் 18 மற்றும் மார்ச் 19 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 21 […]
Tag Archives: Tamil Nadu
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை… ஆரஞ்சு எச்சரிக்கை… பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை: தமிழ் நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ் நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை […]
113 ஆண்டுகளில் இல்லாத பெருமழை!
சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதியில் இயல்பை விட 93% அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில், திருநெல்வேலி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 100% க்கும் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டார். […]
ஒரே மாதத்தில் 4 பள்ளி மாணவிகள் மரணம்… என்ன நடக்கிறது தமிழகத்தில்?
சென்னை: கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தமிழகத்தில் ஜூலை மாதத்தில் நடந்த 4-வது தற்கொலை சம்பவமாக பதிவாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் கல்வியை வியாபாரமாக இல்லாமல் சேவையாக செய்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். விருத்தாச்சலம் மாணவி கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கடந்த திங்கள்கிழமை இரவு (ஜூலை […]
தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,359 ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,382- ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 66 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் 617 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 […]
இன்றைய டாப் செய்திகள்! : வலிமை ரிலீஸ் தேதி அப்டேட்!
வலிமை ரிலீஸ் தேதி அப்டேட்! அஜித்குமார் நடிக்க, வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை தீபாவளி பண்டிகையில் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் வெளியாகும் என்று எதிர்பார்த்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனாலும் தேதியை வெளியிடவில்லை. இந்த நிலையில் வலிமை படத்தை பொங்கலுக்கு சில நாட்கள் முன்பாகவே திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர் என்றும், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி […]
‘இறங்கி’ வந்தது தக்காளி!
சென்னை: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பருவ மழை தொடங்கியது. இதன் எதிரொலியால், தமிழகத்திற்கு தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.180 வரை விற்கப்பட்டது. அன்றாட சமையலுக்கு தேவைப்படும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்ததால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளியின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தினர். இதனைத் அரசின் தொடர்ந்து, பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.70, […]
இந்த வாரமும் மழை இருக்கும்! – வானிலை ஆய்வு மையம்
சென்னை: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி […]
4 தென்மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை!
சென்னை: தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் […]
தமிழ் நாட்டில் மதுக்கடைகள் திறப்பு எப்போது?
சென்னை: கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ் நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் மதுக்கடைகள் முற்றாக அடைக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டது, ஆனால் ஓரிரு வாரங்களுக்குப் பிறகு அங்கெல்லாம் மதுக்கடைகள் பகுதி நேரமாகத் திறக்கப்பட்டுவிட்டன. ஆந்திரா, கர்நாடகத்தில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மது விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் கடந்த […]