தன்மானம் இல்லாத கூட்டம்தான் திமுகவை விமர்சிக்கிறது! – முக ஸ்டாலின்

கோவை: கோவை மாவட்டத்துக்கு 3 நாள் பயணமாகச் சென்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். முதல் நிகழ்ச்சியாக இன்று கோவை ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகளழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் ரூ.272 கோடியில் முடிவுற்ற 229 பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.663 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர். இதையடுத்து விழாவில் […]

திரையரங்குகளில் மீண்டும் அவதார்!

கடந்த 2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருந்த இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவதார் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனாலும், இன்றுவரை அப்படத்தின் வசூலை எந்தப் படமும் மிஞ்சவில்லை. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. […]

பாஜக – ரஜினி – தனிக்கட்சி- மீண்டும் பாஜக… ஒரு ஆர்எஸ்எஸ்காரரின் அரசியல் தாவல்கள்!

சென்னை: ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கைகோர்க்க பாஜகவில் இருந்து விலகிய அர்ஜுனமூர்த்தி, ரஜினி வராததால் தனிக்கட்சி தொடங்கினார்.இப்போது மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறார். பல்வேறு தொழில்களை நடத்தி வரும் ரா.அர்ஜுனமூர்த்தி, ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர். தமிழக பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு மாநில வர்த்தகப் பிரிவு தலைவர் பதவி அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அறிவு சார் பிரிவின் தலைவராகவும் இருந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ரா.அர்ஜுனமூர்த்தி மனைவியின் பள்ளி தோழி என்பது […]

‘உதயநிதி வந்துட்டாருல்ல… அப்ப இந்தியன் 2 நிச்சயம் ரிலீசாகிடும்!’

கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் ஷங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். தயாரிப்பு நிறுவனமான லைகாதான் ஏகப்பட்ட பணத்தை செலவழித்துவிட்டு, அல்லாடிக் கொண்டிருந்தது. ‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்’ என தெரிவித்திருந்தார். இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி […]

எல்லா கதைகளும் ஏன் விறுவிறுப்பாக நகர வேண்டும்? – இயக்குநர் வசந்த பாலன்

ஆமிர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் அண்மையில் வெளியானது. சராசரி மனிதனைவிட சற்றே குறைவான புரிதல் கொண்ட, அதே நேரம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைச் சொன்ன அந்தப் படத்தைச் சிலர் படம் மெதுவாக உள்ளது என்கிற தொனியில் விமர்சனங்கள் எழுதியிருந்தனர். இது குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் பொதுவான பார்வை ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்தக் கட்டுரை… கதை மெதுவாக நகர்கிறது என்கிற விமர்சனத்தை பொதுவாக இணையம் முழுக்க பல […]

வியாழன் கிரகத்தின் வண்ணமயான புதிய தோற்றம் – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த படம் வெளியானது!

  வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சக்திவாய்ந்த ‘ஜேம்ஸ் வெப்’ என்ற விண்வெளி தொலை நோக்கியை விண்ணில் ஏவியது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய ரகசியங்களை உடைக்கும் விதமாக அந்தப் படங்கள் அமைந்தன. விண்மீன் திரள்களின் படங்களும் வெளியிடப்பட்டன. இதற்கிடையே சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான வியாழன் கோளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்தது. இந்தநிலையில் […]

மாஸ்டர் மகேந்திரனை நம்பி தமிழுக்கு வந்த தெலுங்கு தயாரிப்பாளர்!

மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள ‘அர்த்தம்’ படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அர்த்தம் படத்தில், மாஸ்டர் மகேந்திரனுடன், ஷ்ரத்தா தாஸ், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது: “நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்துள்ளேன். தமிழில் […]

கபாலி பெரும் ஹிட்… ஆனால் பெரும் மன உளைச்சலில் இருந்தேன்! – பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித்தின் அடுத்த படைப்பு நட்சத்திரம் நகர்கிறது. காதலைப் பற்றி இந்தக் கதையில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற இயக்குநர் இயக்குநர் சசி பேசியதாவது: “சிலர் பார்க்க ஆஜானுபாகுவாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் […]

‘5 படங்களுடன் இன்றைய இயக்குநர்களின் கதை முடிந்துவிடுகிறது!’ – எஸ்பி முத்துராமன்

விஜித் நடித்துள்ள டைட்டில் என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், பேரரசு, நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.பாக்யராஜ், சின்ன திரைப்படங்கள் வெற்றியடைய வேண்டும். அதற்கு தமிழக அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக நான்கு திரையரங்குகொண்ட மல்டிபிளக்ஸில் ஒரு திரையரங்கை சிறிய படங்களுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு […]

திருச்சிற்றம்பலம் பட விமர்சனம்

நடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ் இசை: அனிருத் தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் எழுத்து – இயக்கம்: மித்ரன் ஜவஹர் மித்ரன் ஜவஹர் தனுஷ் படங்களை இயக்குவதற்கென்றே பிறந்தவர் போல. இதுவரை அவர் இயக்கியவை 6 படங்கள். அவற்றில் நான்கு தனுஷ் நடித்தவை. இன்னொன்று பெரும்பாலும் ரீமேக் கதைகளையே படமாக்கி வந்தவர் இப்போதுதான் ஒரிஜினல் கதையை இயக்கியிருக்கிறார். குடும்பப் பின்னணி, மென்மையான காதல், படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை… இதுதான் மித்ரன் […]