டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. பாராளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய எனது பேச்சுகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. பாராளுமன்றத்தில் என்னைப்பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். பாராளுமன்றத்தில் அதானி […]
Tag Archives: Rahul Gandhi
‘ராகுல் காந்தியின் பதவி பறிப்பு’ பாராட்டி வரவேற்போம்!
2019 ஆம் ஆண்டு, கர்நாடகத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய போது, லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார் என்பதைக் காரணம் காட்டி குஜராத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. எனினும் மேல் முறையீட்டிற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளித்து, நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அந்த ஒரு மாதம் கூட காத்திருக்கப் பொறுமை இல்லாமல், ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் […]
இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்து, டெல்லி திரும்பினார் ராகுல் காந்தி!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை நேற்று ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைந்தது. 4 ஆயிரம் கிலோ மீட்டரை நடந்தே கடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ […]
14 வது நாளாக நடைப் பயணத்தைத் தொடரும் ராகுல் காந்தி!
கொச்சி: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. தொடங்கினார். கன்னியாகுமரியிலிருந்து இந்தப் பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று 13-வது நாளாக கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பாதயாத்திரை சென்றார். இந்தநிலையில் இன்று 14வது நாளாக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் காலை நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நடைபயணத்தின் போது கேரள மக்கள் ராகுல் காந்திக்கு […]
ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம்… கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தே செல்கிறார்!
அகஸ்தீஸ்வரம்: நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார். ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்தார். பின்னர் நேற்று காலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு அவர் சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். அங்கு மரக்கன்று நட்டதோடு, […]
ராஜீவ் காந்தி 78வது பிறந்த நாள்: ராகுல், ப்ரியங்கா அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. மிக இளம் வயதில் இந்தியாவின் பிரதமராகி, தொலை நோக்குப் பார்வையுடன் செயல்பட்டவர் ராஜீவ் காந்தி. இன்று இந்தியாவில் மக்கள் அனுபவிக்கும் பல்வேறு வசதிகளுக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்டவர் ராஜீவ் காந்திதான். ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த […]
2, 3 பணக்காரர்களுக்காக மட்டுமே நடக்கும் சர்வாதிகார ஆட்சி இது! – ராகுல் காந்தி
டெல்லி: விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத் துறை சோதனையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து காங்கிரசார் மனு கொடுக்கக் குவிந்தனர். இன்னொரு பக்கம் பிரதமர் மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்துக்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவானது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் […]
மன்னிக்கக் கற்றுத் தந்தவர் என் தந்தை!- ராகுல் காந்தி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனக்கும், பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக்கொடுத்ததாக அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியில் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராஜீவ் காந்தி குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்ட ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: எனது தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவரது கொள்கைகள் நவீன இந்தியா வடிவமைத்தன. அவர் கருணை மிக்க மனிதர். எனக்கும், பிரியங்காவுக்கும் […]
இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை உடைக்கிறார் மோடி! – ராகுல் காந்தி
டெல்லி: இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை உடைக்கிறார். இந்தியர்களுக்கு இடையேயான உறவை அவர் உடைக்கிறார் என்றால் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படைக் கருத்தையே அவர் உடைக்கிறார். இதன் காரணமாகவே நான் அவரை எதிர்க்கிறேன். இந்திய மக்களிடையே ஒரு பிணைப்பு பாலத்தை உருவாக்குவது எனது கடமை, வேலை […]
என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்! – ராகுல் காந்தி
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை தந்தார். அவரை முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக மீனவ கிராமமான சோலைநகருக்கு ராகுல்காந்தி காரில் சென்றார். அங்கு மீனவ பெண்களை சந்தித்துப் பேசினார். பின்னர் புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி உங்கள் தந்தை […]