ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் […]
Tag Archives: விக்ரம்
சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்!
சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள திரைப்படத்தில் ‘சீயான்’ விக்ரம், […]
பொன்னியின் செல்வன் திரைப்பட விமர்சனம்
நடிகர்கள்: விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா ஒளிப்பதிவு: ரவி வர்மன் இசை: ஏஆர் ரஹ்மான் தயாரிப்பு: சுபாஷ்கரன் – மணிரத்னம் கதை: அமரர் கல்கி இயக்கம்: மணிரத்னம் பொன்னியின் செல்வன்… திரையுலகினரின் 70 ஆண்டு காலக் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. அமரர் கல்கியின் காலத்தை வென்ற காவியமான பொன்னியின் செல்வன் புதினம் அழகிய பிரமாண்டமான திரைப்படமாக வெளியாகி உலகையே பேச வைத்திருக்கிறது. உலகம் அறிந்த கதை இது. சோழர் […]
அட கோப்ரா டீம்…. இதை ரிலீசுக்கு முன்னாடியே செஞ்சிருக்கலாமே!
டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் […]
கோப்ரா பட விமர்சனம்
நடிகர்கள்: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் ஒளிப்பதிவு: ஹரீஷ் கண்ணன் இசை: ஏஆர் ரகுமான் தயாரிப்பு: லலித் குமார் எழுத்து இயக்கம்: அஜய் ஞானமுத்து சிறிய வயதிலேயே சர்வதேச அளவில் தொழில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்கிறார் ரோஷன் மேத்யூ. தொழிலை விரிவாக்க ஏகப்பட்ட சட்டவிரோத வேலைகளைச் செய்ய, பல நாடுகளிலும் அவரது தொழில்கள் முடக்கப்படுகின்றன. இதற்குக் காரணமானவர்களை கொல்லத் திட்டமிடுகிறார். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல… ஸ்காட்லாந்து இளவரசர், ரஷ்ய ராணுவ அதிகாரி… இப்படி எல்லாருமே பெரிய […]
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை! #CHIYAAN61
பொன்னியின் செல்வன், கோப்ரா திரைப்படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளன. சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், ஷபீர் உள்ளிட்டவர்களை கொண்டு நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். அந்தப் படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ மூலம் சமீபத்தில் பா.ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான […]
‘விக்ரம் பிரமாண்ட வெற்றி… இதுக்கு நான் பண்ற கைமாறு என்ன தெரியுமா?’
https://youtu.be/LT-1BGy4YIw
விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றி… அடுத்தடுத்த படங்களைத் தொடங்கும் கமல் ஹாஸன்!
கமல் ஹாஸன், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் கவுரவ வேடத்தில் சூர்யா நடித்த விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ம் தேதி உலகெங்கும் வெளியானது. இதற்கு முன் கமல் நடித்த எந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்தத் தலைமுறை ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்ததால், கிட்டத்தட்ட கமல் ஹாஸனை ஒரு தலைமுறை ரசிகர்களே மறந்துவிட்ட நிலையில், மீண்டும் அதிரடியாக விக்ரம் மூலம் […]
விக்ரமின் மகான் ட்ரைலர்!
விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவரவுள்ள ‘மகான்’ ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது ப்ரைம் உறுப்பினர்கள் இப்படத்தை பிப்ரவரி 10 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் காணலாம். கன்னடத்தில் இப்படத்திற்கு ‘மஹா புருஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். ‘சீயான்’ விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா […]
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்! – வெளியானது அறிவிப்பு
சென்னை: ‘அட்டகத்தி’, மூலம் அறிமுகமாகி ‘மெட்ராஸ்’ படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் பா ரஞ்சித். அடுத்த இரு படங்கள் கபாலி, காலாவில் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கி, நட்சத்திர இயக்குநரானார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த நிலையில், நடிகர் […]