சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. லேசான நெஞ்சுவலி காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், விரைவில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவனை செய்திக் குறிப்பில் […]
Category Archives: தலைப்புச் செய்தி
இளையராஜாவின் சாதனைகளுக்காக குடியரசுத் தலைவர் பதவியே கொடுக்கலாம்! – கமல் ஹாஸன் நச்!!
சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். திரையுலகிலிருந்து ரஜினிகாந்த் முதல் நபராக இளையராஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் […]
மாநிலங்களவை எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்… குவியும் வாழ்த்துகள்!
டெல்லி: விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குளில் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இளையராஜாவின் படைப்புகள் தலைமுறை தலைமுறையாக மக்களைக் கவர்ந்துள்ளன. அவரது படைப்புகள் […]
சமையல் எரிவாயு விலை ரூ 50 உயர்வு!
சென்னை: இந்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது. இதில் வணிக சிலிண்டரின் விலை குறைந்தாலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை இன்று ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது. இதேபோல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ..8.50 காசுகள் குறைந்து ரூ.2177.50க்கு விற்பனை […]
ராக்கெட்ரி: நம்பி விளைவு – விமர்சனம்
நடிகர்கள்: ஆர் மாதவன், சிம்ரன் ஒளிப்பதிவு: சிரிஷா ராய் இசை (பாடல்கள்): நேட் கார்னல், பில்லி டாவ்சன் இசை (பின்னணி): சாம் சிஎஸ் தயாரிப்பு: ஆர் மாதவன், சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் எழுத்து, இயக்கம்: ஆர் மாதவன் இந்திய விண்வெளித் துறை இஸ்ரோ (ISRO) இன்று சர்வதேச அளவில் பல சாதனைகளைச் செய்து வருகிறது. நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்கலங்களை அனுப்பும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்றால் அது ஒரு நாளில் அல்லது ஆண்டில் நிகழ்த்தப்பட்ட […]
சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி தந்த கௌரவம்… முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து!
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இதைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக […]
நடிகை மீனாவின் கணவர் மரணம்
தமிழ் திரையுலகின் முதல் நிலை நடிகையாகத் திகழ்ந்தவர் மீனா. ரஜினிகாந்த், கமல் ஹாஸன் உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்து உச்சத்தில் இருந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த கணிப்பொறியாளர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா. திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்தியிருந்த மீனா, சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நடிப்பைத் ,தொடர்ந்தார். த்ரிஷ்யம், அண்ணாத்த போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடி்த்தார். […]
தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,359 ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,382- ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 66 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் 617 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 […]
இலங்கையில் விண்ணைமுட்டும் விலைவாசி… கிலோ அரிசி விலை ரூ 400 வரை உயரும் ஆபத்து!
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. காபியின் விலை ரூ 100ஐத் தாண்டிவிட்டது. இட்லியின் விலை ரூ 350ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது ஒருபக்கம், அவை பொதுமக்களுக்கு கிடைப்பதே அரிதாகிவிட்டது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ 420, டீசல் விலை ரூ 400 ஆக உள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ 350, ஒரு முட்டை ரூ 40, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ […]
உக்ரைனிலிருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷிய பல்கலைக்கழகங்களில் படிக்கலாம்! – ரஷிய தூதர்
திருவனந்தபுரம்: ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வந்த 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். போர் இன்னும் முடிவடையாததால் அவர்கள் மீண்டும் நேரடி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஷிய தூதரக துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின், “படிப்பை பாதியில் விட்டு வெளியேறிய இந்திய மாணவர்களுக்கு, அவர்களின் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல், ரஷிய பல்கலைக் கழகங்களில் சேர்க்கை வழங்கப்படும். இதன் […]