சென்னை: வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால், மார்ச் 18 மற்றும் மார்ச் 19 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 21 […]
Tag Archives: தமிழ் நாடு
தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,359 ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,382- ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 66 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் 617 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 […]
நாளை கடைசி நாள்… பயிர்க் காப்பீடு செஞ்சிட்டீங்களா?
சென்னை: இது குறித்து உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 20.95 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு சுமார் 10 இலட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், […]
4 தென்மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை!
சென்னை: தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் […]
தமிழகம்: கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு
சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கபட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் மூலம், மறுஉத்தரவு வரும் வரை, மே மாதத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும். மே 2 ந்தேதி முழு ஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு, டிவி தொடர் […]
இந்த சாதிச் சனியனால் என்ன சாதிக்கப் போகிறோம்! – தமிழருவி மணியன்
மனிதர்கள் யாரும் இந்த நாட்டில், இந்த ஊரில், இந்த சாதியில், இன்னாருக்குப் பிறக்க வேண்டும் என்று இறைவனிடம் மனுப்போட்டு வந்து சேரவில்லை. இந்த சாதிச் சனியனை ஏன் நம்மால் முற்றாகப் புறம் தள்ள முடியவில்லை என்பதை இன்றுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் அறிவுறுத்தி என்ன பயன்? ஆண் என்றும் பெண் என்றும் சாதி இரண்டன்றி வேறில்லை என்று ஒளவை அழுத்தமாகத் தெளிவுபடுத்திய பின்பும் நமக்கு ஏன் […]