நடிகை மீனாவின் கணவர் மரணம்

1

மிழ் திரையுலகின் முதல் நிலை நடிகையாகத் திகழ்ந்தவர் மீனா. ரஜினிகாந்த், கமல் ஹாஸன் உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்து உச்சத்தில் இருந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த கணிப்பொறியாளர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்தியிருந்த மீனா, சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நடிப்பைத் ,தொடர்ந்தார். த்ரிஷ்யம், அண்ணாத்த போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடி்த்தார்.

இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றும் அவருக்கு ஏற்பட்டதால், அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இரு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு பாதிப்பு மோசமாக இருந்ததால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனிக்கவில்லை. இன்று அதிகாலை அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீனாவின் இல்லத்தில் நடக்கிறது.

வித்யாசாகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தொலைபேசி வழியாக மீனாவுக்கு அவர் ஆறுதல் கூறினார். நடிகர்கள் கமல் ஹாஸன், சரத்குமார் உள்பட திரையுலகினர் பலரும் வித்யாசாகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.