நட்சத்திரம் நகர்கிறது ஒரு பார்வை

மேலும் கீழும் பூச்சில்லாமல் சிந்தல், சிதறலின்றி தனது அரசியல் பார்வையை திட்டவட்டமாக முன்வைக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித், “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் மூலம். காதலே ஓர் அரசியல்தான் என்கிறது படம். “வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழிந்துவிடும் என்று சொல்பவர்களை எனக்கு ஆகாது” என்கிறார் கதையின் நாயகி துஷாரா, ஒரு காட்சியில். இன்னொரு காட்சியில் “நீங்கள் கம்யூனிஸ்டா?” என்று அவரிடம் கேட்கப்படுகிறது. தயக்கமோ தாமதமோ இன்றி “நான் ஒரு அம்பேத்காரிஸ்ட்” என்று பதில் வருகிறது. “போர்டிங் ஸ்கூலில்” படித்துவிட்டு […]

கோப்ரா பட விமர்சனம்

நடிகர்கள்: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் ஒளிப்பதிவு: ஹரீஷ் கண்ணன் இசை: ஏஆர் ரகுமான் தயாரிப்பு: லலித் குமார் எழுத்து இயக்கம்: அஜய் ஞானமுத்து சிறிய வயதிலேயே சர்வதேச அளவில் தொழில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்கிறார் ரோஷன் மேத்யூ. தொழிலை விரிவாக்க ஏகப்பட்ட சட்டவிரோத வேலைகளைச் செய்ய, பல நாடுகளிலும் அவரது தொழில்கள் முடக்கப்படுகின்றன. இதற்குக் காரணமானவர்களை கொல்லத் திட்டமிடுகிறார். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல… ஸ்காட்லாந்து இளவரசர், ரஷ்ய ராணுவ அதிகாரி… இப்படி எல்லாருமே பெரிய […]

தீபாவளி முதல் சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் 5 ஜி சேவை… முகேஷ் அம்பானி அறிவிப்பு!

டெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, இந்தக் கூட்டத்தில் பேசும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது எனவும், ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். மேலும் […]

ஹர்திக் பாண்டியா அசத்தல்… ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி!

  துபாய்: பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை குரூப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தார். துபாயில் நடக்கும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இரண்டாவதாக பேட் செய்யும் அணி வெற்றி பெறுவதற்கு அதிக காரணங்கள் உள்ளதால் அப்போதே இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியது. […]

டைரி பட விமர்சனம்

நடிகர்கள்: அருள்நிதி, கிஷோர், ஜெயப்பிரகாஷ், பவித்ரா மாரிமுத்து ஒளிப்பதிவு: அரவிந்த் சிங் இசை: ரான் ஈத்தன் யோகன் தயாரிப்பு: கதிரேசன் எழுத்து – இயக்கம்: இன்னாசி பாண்டியன் திகில் பட வரிசையில் இன்னொரு வரவாக வந்திருக்கிறது டைரி படம். பயிற்சி முடித்த உதவி ஆய்வாளர்களிடம், ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு கேஸை ஒப்படைக்க உத்தரவிடுகிறார் உயர் அதிகாரி. அதன்படி கண்ணை மூடிக் கொண்டு ஒரு கோப்பை எடுத்துத் தருகிறார் அருள்நிதி. அது 16 ஆண்டுகளுக்கு […]

என் இனிய தமிழ் மக்களே…. – மருத்துவமனையிலிருந்து பாரதிராஜா அறிக்கை

என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் […]

தன்மானம் இல்லாத கூட்டம்தான் திமுகவை விமர்சிக்கிறது! – முக ஸ்டாலின்

கோவை: கோவை மாவட்டத்துக்கு 3 நாள் பயணமாகச் சென்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். முதல் நிகழ்ச்சியாக இன்று கோவை ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகளழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் ரூ.272 கோடியில் முடிவுற்ற 229 பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.663 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர். இதையடுத்து விழாவில் […]

எல்லா கதைகளும் ஏன் விறுவிறுப்பாக நகர வேண்டும்? – இயக்குநர் வசந்த பாலன்

ஆமிர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் அண்மையில் வெளியானது. சராசரி மனிதனைவிட சற்றே குறைவான புரிதல் கொண்ட, அதே நேரம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைச் சொன்ன அந்தப் படத்தைச் சிலர் படம் மெதுவாக உள்ளது என்கிற தொனியில் விமர்சனங்கள் எழுதியிருந்தனர். இது குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் பொதுவான பார்வை ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்தக் கட்டுரை… கதை மெதுவாக நகர்கிறது என்கிற விமர்சனத்தை பொதுவாக இணையம் முழுக்க பல […]

வியாழன் கிரகத்தின் வண்ணமயான புதிய தோற்றம் – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த படம் வெளியானது!

  வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சக்திவாய்ந்த ‘ஜேம்ஸ் வெப்’ என்ற விண்வெளி தொலை நோக்கியை விண்ணில் ஏவியது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய ரகசியங்களை உடைக்கும் விதமாக அந்தப் படங்கள் அமைந்தன. விண்மீன் திரள்களின் படங்களும் வெளியிடப்பட்டன. இதற்கிடையே சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான வியாழன் கோளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்தது. இந்தநிலையில் […]

கபாலி பெரும் ஹிட்… ஆனால் பெரும் மன உளைச்சலில் இருந்தேன்! – பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித்தின் அடுத்த படைப்பு நட்சத்திரம் நகர்கிறது. காதலைப் பற்றி இந்தக் கதையில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற இயக்குநர் இயக்குநர் சசி பேசியதாவது: “சிலர் பார்க்க ஆஜானுபாகுவாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் […]