ஹர்திக் பாண்டியா அசத்தல்… ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி!

  துபாய்: பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை குரூப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தார். துபாயில் நடக்கும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இரண்டாவதாக பேட் செய்யும் அணி வெற்றி பெறுவதற்கு அதிக காரணங்கள் உள்ளதால் அப்போதே இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியது. […]