ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் […]
Tag Archives: Pa Ranjith
பாஜக வுக்கு துணை போகிறமாதிரி கேட்கலாமா? – பா இரஞ்சித்துக்கு திமுக கேள்வி
இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் கூறியிருப்பதாவது: “திமுகவை தலித் மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சி என கட்டமைக்க பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது. அதிலே படுதோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது, சந்திக்கவும் போகிறது. அண்ணன் திரு. ஆம்ஸ்டிராங்க் அவர்கள் கொலை என்ன காரணத்திற்காக நடந்திருக்கிறது, யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே, திமுகவின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் அண்ணன் பா. ரஞ்சித் அவர்கள். அண்ணன் பா. ரஞ்சித் […]
இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட முதல் தோற்றம்!
புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், […]
J.பேபி… ஒரு படம் நமக்குள் என்னவெல்லாம் நிகழ்த்தும்!
ஒரு படம் நமக்குள் என்ன பண்ணிவிடும்? நம்மை எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போய் நிறுத்துமா? எல்லா உறவுகளுக்கும் நமக்குமான அன்பை, பிரிவை, பிரச்னைகளை மனக்கண்ணுக்குள் கொண்டுவருமா? அம்மாவுக்கு போன் பண்ணி அக்கறையாகப் பேச வைக்குமா? அக்கா, தம்பிக்கு நேரம் ஒதுக்கி, “சும்மாதான் பேசினேன்… நல்லாயிருக்கியளா?” எனக் கேட்கச் சொல்லுமா? சிக்கித் திணறும் ஒரு உதவி இயக்குநருக்கு 25,000 பணம் அனுப்பிவைத்து, “என்னால முடிஞ்சது இவ்வளவுதாண்டா… இப்போதைக்குச் சமாளி… அடுத்து வாரதைப் பார்த்துக்கலாம்” எனத் தைரியமூட்டுமா? அன்பைத் தவிர […]
நாட்டை மோசமான நிலையிலிருந்து மீட்க கலையைப் பயன்படுத்துவோம்! – பா இரஞ்சித்
நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ருத்வி, பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தில் நடித்த […]
‘புளூ ஸ்டார்’ அனைவருக்குமான படம் – இயக்குநர் ஜெய்குமார்
அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதிபெருமாள், அருண்பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் புளூ ஸ்டார். லெமன்லீப் கிரியேசன் பிரைவேட் லிமிடெட் ஆர் கணேஷ்மூர்த்தி, ஜி சவுந்தர்யா , மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுகம் ஜெய்குமார் இயக்கியிருக்கிறார். படம் குறித்து ஜெய்குமார் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் , பிடித்தமான விளையாட்டாகவும் மாறிவருகிறது. சிற்றூர்கள் முதல் குக்கிராமங்கள் […]
கபாலி பெரும் ஹிட்… ஆனால் பெரும் மன உளைச்சலில் இருந்தேன்! – பா ரஞ்சித்
இயக்குநர் பா ரஞ்சித்தின் அடுத்த படைப்பு நட்சத்திரம் நகர்கிறது. காதலைப் பற்றி இந்தக் கதையில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற இயக்குநர் இயக்குநர் சசி பேசியதாவது: “சிலர் பார்க்க ஆஜானுபாகுவாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் […]
‘இளையராஜாவிடம் ஏன் நான் போகவில்லை?’ – பா.இரஞ்சித்
இயக்குநர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனும் படத்தை இயக்கியிருந்தார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல்ஜாசன் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ் வினோத், வின்சு , சுபத்ரா, தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். குண்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிஷோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தென்மா இசையமைத்திருக்கிறார். படம் பற்றி […]
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை! #CHIYAAN61
பொன்னியின் செல்வன், கோப்ரா திரைப்படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளன. சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், ஷபீர் உள்ளிட்டவர்களை கொண்டு நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். அந்தப் படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ மூலம் சமீபத்தில் பா.ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான […]
பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’… காதலே அரசியல்!
பெரும் வரவேற்பு பெற்ற சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கி வரும் புதிய படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்தப் படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஷபீர், ஹரி, தாமு, வின்சு, வினோத், சுபத்ரா, உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு -கிஷோர், இசை -டென்மா, படத்தொகுப்பு- செல்வா ஆர்கே, கலை ரகு, நடனம் -சாண்டி, சண்டை- ஸ்டன்னர் சாம், உடைகள் – அனிதா ரஞ்சித், […]