தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் அண்மையில் பட்டியலிடப்பட்டிருகிறது. இதற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு சந்தை […]
Category Archives: வணிகம்
தீபாவளி முதல் சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் 5 ஜி சேவை… முகேஷ் அம்பானி அறிவிப்பு!
டெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, இந்தக் கூட்டத்தில் பேசும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது எனவும், ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். மேலும் […]
ஓலா மின் வாகன விற்பனையில் பெரும் சரிவு!
சென்னை: மின்சார கார் மற்றும் இருசக்கர தயாரிப்பில் முன்னோடியாக உள்ள ஓலா நிறுவனத்தின் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஓலா நிறுவனத்தின் மின்சார வாகனங்களில் விற்பனை சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை சரிந்துள்ளது. மின்சார வாகனங்களில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்களால், அவற்றைப் வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மின்சாரம் ஏற்றும் நேரத்தில் பேட்டரிகள் வெடிப்பது மற்றும் தீப்பிடித்து எரிவது அதிகரித்து […]
15 நாட்களில் 13 முறை உயர்த்தப்பட்ட பெட்ரோல் – டீசல் விலை!
டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட கிட்டத்தட்ட 2 மடங்குக்கு மேல் எரிபொருட்களில் விலையை பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் உயர்த்திவிட்டது. ஒவ்வொரு முறை விலையை உயர்த்தும்போதெல்லாம் கூசாமல் பழியை முந்தைய காங்கிரஸ் அரசு மீது போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும். வடக்கில் 5 மாநில தேர்தல் நேரத்தில் கிட்டத்தட்ட 137 நாட்களாக பெட்ரோலியப் பொருட்களின் […]
தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: தங்கத்தின் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரன் 64 ரூபாய் குறைந்து 38,016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 8 ரூபாய் விலை குறைந்து 4,752 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒருகிராம் 66 ரூபாய் 70 காசுகளாக உள்ளது. […]
நவம்பர் 2020: வங்கி விடுமுறை நாட்கள்
மும்பை: பண்டிகை மாதங்களில், வங்கி ஊழியர்களுக்கு பல விடுமுறைகள் கிடைக்கின்றன. அதன்படி நவம்பரில், தீபாவளி மற்றும் குரு நானக் ஜெயந்தி ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்களில் வங்கிகள் மூடப்படும் இது தவிர நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளில் மூடப்படும். வழக்கமாக, வங்கிகள் ஞாயிறு மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் செயல்படாது. ஆனால், 2020 நவம்பரில், தீபாவளி இரண்டாவது சனிக்கிழமையன்று வருகிறது. அதாவது வங்கி ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஒரு விடுமுறை குறைகிறது. தீபாவளி வார இறுதி […]