சந்தானம், யோகி பாபு என நகைச்சுவை நடிகர்கள் பலர் கதாநாயகனாக நடிக்கிறார்கள். இப்போது சூரியும் ‘விடுதலை’ படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதுகுறித்து சூரி அளித்துள்ள பேட்டியில், “நான் நகைச்சுவை நடிகராக வளர்ந்த பிறகு சில இயக்குநர்கள் என்னைக் கதாநாயகனாக நடிக்க வைக்க கதை சொன்னார்கள். அதுவும் நகைச்சுவைக் கதைகளாகவே இருந்தன. மற்ற நடிகர்கள் படங்களில் காமெடி வேடங்களில்தானே நடிக்கிறேன் என்று சொல்லி […]
Tag Archives: ரஜினி
ஏஆர் ரகுமான் இயக்கிய படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி!
சென்னை: ஆஸ்கர் நாயகன் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார். முன்னதாக ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி, இசையமைத்திருந்தார். அதே போல் ‘லி மஸ்க்’ என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், மெய்நிகர் உண்மை என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மெய்நிகர் உண்மை மூலம் […]
ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன்தான்! – முன்னனி விநியோகஸ்தர் பேச்சு
சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபாவளியையொட்டி வரும் வெள்ளியன்று இந்தப் படம் திரைக்கு வரும் பிரின்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பிரபல தமிழ் சினிமா விநியோகஸ்தர் அன்புச்செழியன் சிவகார்த்திகேயன் பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “பிரின்ஸ் படத்தை தமிழகம் முழுவதும் எங்களது நிறுவனம் மூலமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். […]
பாஜக – ரஜினி – தனிக்கட்சி- மீண்டும் பாஜக… ஒரு ஆர்எஸ்எஸ்காரரின் அரசியல் தாவல்கள்!
சென்னை: ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கைகோர்க்க பாஜகவில் இருந்து விலகிய அர்ஜுனமூர்த்தி, ரஜினி வராததால் தனிக்கட்சி தொடங்கினார்.இப்போது மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறார். பல்வேறு தொழில்களை நடத்தி வரும் ரா.அர்ஜுனமூர்த்தி, ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர். தமிழக பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு மாநில வர்த்தகப் பிரிவு தலைவர் பதவி அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அறிவு சார் பிரிவின் தலைவராகவும் இருந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ரா.அர்ஜுனமூர்த்தி மனைவியின் பள்ளி தோழி என்பது […]
சந்திரமுகி 2… வெளியானது அறிவிப்பு… ஹீரோ யார் தெரியுமா!
சென்னை: கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில், பி வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட படம் சந்திரமுகி. சென்னையில் மட்டும் 850 நாட்களுக்கும் மேல் ஓடியது. துவரை இந்தப் படத்தின் சாதனையை எந்தப் படமும் முறியடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இயக்குநர் பி வாசு இறங்கினார். கன்னடத்தில் அவர் இயக்கிய ஆப்தமித்ரா படம்தான், தமிழில் சந்திரமுகியானது. கன்னடத்தில் ஆப்தமித்ராவுக்கு இரண்டாம் பாகத்தை ஆப்தரக்சகுடு […]
ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயார்! – கமல் ஹாஸன்
கமல் ஹாஸன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடிப்பில் உருவான விக்ரம் படம் கடந்த வாரம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றுள்ளது. ‘விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் ஹாஸன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அதில் ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், “ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினியிடம் கூற வேண்டும். பின்னர் லோகேஷ்யிடம் கூற வேண்டும். நாங்கள் மூன்று […]