துபாய் வான் வெளியில் ‘ கம் பேக் இந்தியன் ‘!

  இந்தியன் 2 படத்தை உலகம் முழுக்க பல ஆயிரம் அரங்குகளில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. அதற்கேற்ற வகையில் படத்தின் விளம்பரப் பணிகள் உலகளவில் வேகமெடுத்து உள்ளது. ஏற்கெனவே சென்னையில் தொடங்கி, மும்பை, மலேசியா, சிங்கப்பூரிலெல்லாம் படத்தின் புரொமோஷனை நடத்தி முடித்த படக்குழு, அடுத்து துபையில் விண்ணில் பறந்து படத்தினை விளம்பரப்படுத்தினர். துபாய் நகரின் கடற்கரை வான் வெளியில் பாராசூட்டில் பறந்தபடி, கம் பேக் இந்தியன் என்ற பாடல் முழங்க, இந்தியன் 2 […]

சென்னை, மும்பை, மலேசியா…பம்பரமாய் சுழலும் கமல் & டீம்!

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. கமல் ஹாசன் முதாய் வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் முன்னோட்ட படம் அண்மையில் சென்னையில் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் படத்தின் புரொமோஷன் வேலைகளையும் தொடங்கி விட்டது இந்தியன் 2 படக்குழு. இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பங்கேற்று, படத்தில் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம், அடுத்த பாகமான இந்தியன் 3 பற்றியெல்லாம் இயக்குநர் ஷங்கர் […]

வணக்கம் இந்தியா…. எப்படி இருக்கு ரஜினிகாந்த் வெளியிட்ட இந்தியன் 2 அறிமுகம்!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘இந்தியன்-2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘இந்தியன்-2’ படத்தின் அறிமுக விடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். ‘எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன். இந்தியனுக்கு அழிவே இல்லை” […]

‘உதயநிதி வந்துட்டாருல்ல… அப்ப இந்தியன் 2 நிச்சயம் ரிலீசாகிடும்!’

கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் ஷங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். தயாரிப்பு நிறுவனமான லைகாதான் ஏகப்பட்ட பணத்தை செலவழித்துவிட்டு, அல்லாடிக் கொண்டிருந்தது. ‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்’ என தெரிவித்திருந்தார். இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி […]

விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றி… அடுத்தடுத்த படங்களைத் தொடங்கும் கமல் ஹாஸன்!

கமல் ஹாஸன், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் கவுரவ வேடத்தில் சூர்யா நடித்த விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ம் தேதி உலகெங்கும் வெளியானது. இதற்கு முன் கமல் நடித்த எந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்தத் தலைமுறை ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்ததால், கிட்டத்தட்ட கமல் ஹாஸனை ஒரு தலைமுறை ரசிகர்களே மறந்துவிட்ட நிலையில், மீண்டும் அதிரடியாக விக்ரம் மூலம் […]