டெல்லி: நரேந்திர மோடி பிரதமரான 2014ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு மீது தொடர்ச்சியான விமர்சனங்களை வைத்து வருகிறார். அவர் தனது 10 ஆண்டு கால் ஆட்சியின் சாதனைகளைப் பற்றிப் பேசுவதை விட மறைந்த காங்கி்ரஸ் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் பற்றியே தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதுகுறித்து அண்மையில் சத்தீஷ்கர் முன்னாள் முதல் அமைச்சர் பூபேஷ் பாகலிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இப்போதெல்லாம் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருக்கிறார் மோடி. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம்கள் அறிக்கை என்கிறார், […]
Category Archives: அரசியல் | தேர்தல்
அண்ணாவின் கால் தூசி அண்ணாமலை!
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 இல், அவரைப் பற்றிய அவதூறு ஒன்றை அள்ளிவிட்டு இருக்கிறார் அண்ணாமலை. 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழா ஒன்றில், பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, அடுத்த நாள் அதே மேடையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக் கடுமையான சொற்களால் சாடியதாகவும், மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மீனாட்சி அம்மனுக்குப் பால் அபிஷேகத்திற்குப் பதிலாக இரத்த அபிஷேகம் நடக்கும் என்று சொன்னதாகவும், அதற்குப் பயந்து அண்ணாவும், பி.டி. ராஜனும் ஓடிவந்து […]
அதானியைப் பாதுகாக்கிறது மோடி அரசு! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குடியரசுத் தலைவரின் உரை வழிகாட்டியாக இருக்கிறது. தொலைநோக்கு சிந்தனையுடனான உரையை அவர் வழங்கினார். சுதந்திர இந்திய வரலாற்றில் 2004-2014 அடங்கிய பத்தாண்டுகாலம் ஊழல்கள் நிறைந்தது. நாடு முழுவதும் அந்தப்பத்தாண்டுகளில் நாட்டில் ஆங்காங்கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான […]
பாஜக – ரஜினி – தனிக்கட்சி- மீண்டும் பாஜக… ஒரு ஆர்எஸ்எஸ்காரரின் அரசியல் தாவல்கள்!
சென்னை: ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கைகோர்க்க பாஜகவில் இருந்து விலகிய அர்ஜுனமூர்த்தி, ரஜினி வராததால் தனிக்கட்சி தொடங்கினார்.இப்போது மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறார். பல்வேறு தொழில்களை நடத்தி வரும் ரா.அர்ஜுனமூர்த்தி, ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர். தமிழக பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு மாநில வர்த்தகப் பிரிவு தலைவர் பதவி அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அறிவு சார் பிரிவின் தலைவராகவும் இருந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ரா.அர்ஜுனமூர்த்தி மனைவியின் பள்ளி தோழி என்பது […]
தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு- மாவட்டம் வாரியாக அதிகாரப்பூர்வ விவரம்
சென்னை: தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன. சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் தொகுதிவாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மையங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி ஸ்ட்ராங் ரூம்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சீலிடப்பட்ட அந்த அறைகளுக்கு […]
தமிழக தேர்தல் 2021… இன்றுடன் ஓய்ந்தது பிரச்சாரம்!
சென்னை: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திரமோடி, அகில […]
பாஜகவில் சேர்ந்தார் காமெடி நடிகர் செந்தில்!
சென்னை: 80, 90-களில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் செந்தில். கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இன்று வரைக்கும் உள்ளது. இவர் நடிப்பையும் தாண்டி, அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த செந்தில், ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக அரசியல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று தன்னை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார். சென்னை […]