சின்ன படம், பெரிய படம், இவர் படம், அவர் படம் என்ற பாரபட்சம் இல்லாமல், தன் மனத்துக்குப் பட்டதை, தனக்கே உரிய பாணியில் விமர்சனமாக வைப்பவர் ப்ளூ சட்டை மாறன் எனும் இளமாறன். ‘எங்கள் படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? முடிஞ்சா நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது மாறனுக்கு சவால் விட்டு வந்தனர். ‘அவ்ளோதானே… எடுத்துட்டா போச்சு’ என களத்தில் இறங்கிய மாறன் […]
Author Archives: Dhina Cheithi
தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?
சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 7-ந்தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கும். ஆனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம். அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தமிழகத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அதிகரிக்கப்படும். வீடு வீடாக சென்று காய்ச்சல் […]
ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் கர்ணன்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். தனுஷ், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும், முன்னோட்டக் காட்சிகளும் வெளியாகி, பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளன. கொரோனா காலத்துக்குப் பிறகு, ஒரு படத்துக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளதென்றால் அது கர்ணனுக்குத்தான். “இந்த எதிர்ப்பார்ப்பு நாங்களாக வலிந்து உருவாக்கியதில்லை. படத்தின் கதை, இசை. பாடல்கள், நடிகர்கள் தேர்வு என அனைத்தும் சேர்ந்து […]
தமிழக தேர்தல் 2021… இன்றுடன் ஓய்ந்தது பிரச்சாரம்!
சென்னை: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திரமோடி, அகில […]
பாஜகவில் சேர்ந்தார் காமெடி நடிகர் செந்தில்!
சென்னை: 80, 90-களில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் செந்தில். கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இன்று வரைக்கும் உள்ளது. இவர் நடிப்பையும் தாண்டி, அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த செந்தில், ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக அரசியல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று தன்னை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார். சென்னை […]
மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி!
கொல்கத்தா: 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை […]
தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,56,917 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,530 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று 532 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் […]
அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது விஜயகாந்த் கட்சி!
சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. தே.மு.தி.க. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஜெயலலிதா ஒதுக்கியது போன்று 41 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை அ.தி.மு.க. தலைமை ஏற்கவில்லை. இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல் கட்சியாக பா.ம.க.வை அழைத்து அ.தி.மு.க. இடங்களை ஒதுக்கி கொடுத்தது. பா.ம.க. வுக்கு […]
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி!
அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கில் இறங்கியது. பின்னர் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தனர். 2-ம் நாள் முடிவில் இந்திய […]
அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்! – சசிகலா திடீர் அறிக்கை
சென்னை: நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று நமக்கு ஜெயலலிதா காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபடவேண்டும். என்மீது […]