இந்த வாரமும் மழை இருக்கும்! – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி […]

தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா!

  சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,56,917 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,530 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று 532 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் […]

தமிழகம் முழுவதும் விடியவிடிய மழை!

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தொடங்கி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களான எழும்பூர், சிந்தாதரிப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி, புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக […]

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை! – வானிலை

சென்னை: குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 […]

தமிழகத்தில் தொடரும் மழை… சென்னை, புறநகரில் விடிய விடிய கொட்டியது!

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் நிரவ் மற்றும் புரெவி புயல்களால் கடந்த நவம்பர் மாதத்தில் நல்ல மழைப் பொழிவு இருந்தது. புயல்கள் ஓய்ந்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடர்கிறது, சென்னையில் அடையாறு, கிண்டி, தி.நகர். கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு தொடங்கிய […]

தமிழகம் முழுவதும் அடித்து ஊற்றும் பெருமழை!

சென்னை: தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டன. மதுரை, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, ஏழுமலை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. திருச்சி: லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, சமயபுரம்,மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. நாமக்கல்: ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், ஆண்டகளூர்கேட், அத்தனூர் பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடுதுறை: சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, […]

சிலு சிலு காத்து… ஜில்லுன்னு மழை… குளுகுளு தமிழகம்!

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வட கிழக்குப் பருவமழை நேற்று இரவு தொடங்கியது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிகக் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் விடிய, விடிய இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் […]