‘கமல்… கட இங்கதான போடப் போறீங்க?’

கமல் ஹாஸனை அரசியலுக்கு வருமாறு மறைந்த அப்துல் கலாம் வற்புறுத்தினார்.” – பொன்ராஜ் “கலாம் பெயரைத் திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” – கமல் ஹாஸன் “என்னங்கடா கலர் கலரா ரீல் வுடறீங்க… கட இங்கதான போடப் போறீங்க. தேர்தலன்னிக்கு பாத்துக்கறோம்!” – மாண்புமிகு வாக்காளர்கள்

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: எப்போ… எங்கே தெரியுமா?

லண்டன்: 12வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த 2019 ஆம் ஆண்டு 2 மாதங்கள் நடந்தன. இதன் இறுதிப் போட்டியில் நியயூசிலாந்தை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது இங்கிலாந்து. கிரிக்கெட்டின் தாயகமான. இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை. அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 2023-ம் ஆண்டு நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே நடக்கின்றன. இதற்கு முன் மூன்று முறை இந்தியாவில் […]

ஏதோ நடக்கிறது… மர்மமாய் இருக்கிறது!

உச்ச நட்சத்திரத்தின் அரசியல் அத்தியாயம் ஆரம்பிக்கும் முன்பே முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக அவர் வீட்டுக் கதவைத் திறந்து நின்று வாயைத் திறந்தாலே, அடுத்த நாள் வரை விவாதங்கள் தூள் கிளம்பும். ஆனால் ஒரேயடியாக தனது அரசியலுக்கு அவர் முழுக்குப் போடுவதாக மூன்று பக்க அறிக்கை கொடுத்ததை செய்தியாக வெளியிட்டு, பேருக்கு ஓரிரு விவாங்களை நடத்தியதோடு அத்தனை சேனல்களும் அமைதியாகிவிட்டன, அச்சு, இணைய ஊடகங்களில் பெரிதாக எந்தத் துப்பறியும் கட்டுரைகளும் இடம்பெறவில்லை. அதன் பிறகு உச்ச நட்சத்திரமும் குறைந்தபட்சம் […]

அன்பிற்கினியாள்… சந்தேகமற்ற வெற்றிப் படம்!

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில், கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. திரையிடல் நிறைவடைந்த பின் படக்குழுவினர் பேசினார்கள். நடிகர் அருண்பாண்டியன்: “அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண தாமதம். […]

என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்! – ராகுல் காந்தி

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை தந்தார். அவரை முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக மீனவ கிராமமான சோலைநகருக்கு ராகுல்காந்தி காரில் சென்றார். அங்கு மீனவ பெண்களை சந்தித்துப் பேசினார். பின்னர் புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி உங்கள் தந்தை […]

சென்னை 2வது டெஸ்ட்: தரமாக, சிறப்பாக பழி தீர்த்த இந்தியா! #INDvsENG

சென்னை: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 161 ரன்னும், ரஹானே 67 ரன்னும், ரிஷாப் பண்ட் ஆட்டம் இழக்காமல் 58 ரன்னும் […]

‘கோவிலுக்கு வந்தது போலிருக்கு!’ – இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் ரஜினிகாந்த்

பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, சொந்தமாக ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் அதி நவீன இசைப் பதிவுக் கூடம் அமைத்துள்ளார் இளையராஜா. தனது புதிய படங்களின் இசைக் கோர்ப்புப் பணிகளை இங்குதான் மேற்கொண்டு வருகிறார் இசைஞானி. இந்நிலையில் நேற்று காலை இளையராஜாவின் தி நகர் வீட்டுக்கு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். இளையராஜாவுடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய ரஜினி, இளையராஜாவின் சொந்த ஸ்டூடியோவுக்கு அவருடன் சென்றுள்ளார். ஸ்டூடியோவை சுற்றிப் பார்த்து வியந்த ரஜினி, ‘கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு […]

வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் சிலர் செய்யம் செயல்கள் வருத்தமுற செய்கிறது! – நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை

சென்னை: அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் சமீப காலமாக வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர். அஜித் இப்போது நடித்து வரும் வலிமை படத்தின் புதிய தகவல்களை வெளியிடக் கேட்டு சமூக வலைத் தளங்களில் விதவிதமாக பதிவுகள் இட்டு வருகின்றனர். சமீபத்தில் ஒருபடி மேலே போய், தமிழக முதல்வர், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தமிழகம் வந்த பிரதமர் மோடி போன்றவர்களிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அலப்பறை செய்தனர் இந்த ரசிகர்கள். இதனால் கடுப்பாகிப் போன நடிகர் […]

முடிந்தது டப்பிங்… ஏப்ரலில் கர்ணன்!

தனுஷின் 41-வது படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்ணன் படத்திற்காக தனுஷ் டப்பிங் செய்த புகைப்படத்தை படக்குழு நேற்று […]

அரசியலுக்கு வர சந்தானம் ரெடி…. ராஜ்யசபா சீட் தர யாராவது தயாரா?

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது: “தயாரிப்பாளர் குமாருக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இப்போது படப்பிடிப்பு போகலாம், அப்போது போகலாம் என்று காத்திருந்தோம். ஆனால், அனைத்தையும் […]