சினிமாவில் இருந்துக்கொண்டு காமராஜர் மீது இவ்வளவு பக்தியா? – ஜீவாவை பாராட்டிய தமிழருவி மணியன்

ஜீவா, திஷா பாண்டே நடிப்பில், இ இப்ராகிம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் படம் கொம்பு. பன்னீர் செல்வம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை மாலை சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரஜினி கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். அவர் பேசுகையில், “நான் கலந்து கொள்ளும் இரண்டாவது திரைப்பட நிகழ்வு இது. நிறைய விழாக்களுக்கு என்னை அழைத்தாலும் அவற்றில் நான் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிடுவது […]

புற்று நோய் பாதித்த நடிகர் தவசி மரணம்!

மதுரை: கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி களவாணி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், லிங்கா உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் தவசி. அவருக்குபுற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், சக நடிகர்கள் நிதி அளித்து உதவ வேண்டும் என்றும் தவசி வீடியோவில் கண்ணீர் மல்க பேசி இருந்தார். அத்துடன் உடல் மெலிந்து […]

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: தேனாண்டாள் முரளி வெற்றி!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கினார். இதுதவிர துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 1050 பேர் மட்டுமே ஓட்டுப் போட்டனர். இந்நிலையில், தயாரிப்பாளர் […]

தீபாவளிக்கு திரையரங்குகளில் சந்தானத்தின் சிரிப்பு வெடி!

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடமேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜபார்ட் காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றன. அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்திருந்தார். படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, “படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம். சந்தானத்தை வேறு சில பரிமாணங்களை இதில் […]

சூர்யா 40: பாண்டிராஜ் இயக்குகிறார்!

சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. கொரோனா அச்சம் காரணமாக இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால், இந்த படம் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஆன்லைனில் வருகிற 30-ந்தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் விமானப் படையில் இருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ் தாமதமாக கிடைத்ததால் தள்ளி வைத்துள்ளனர். தீபாவளியையொட்டி ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்து 39-வது படமாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து […]

பொங்கலுக்கு மாஸ்டர் உள்பட 4 புதிய படங்கள்!

இந்த ஆண்டு முழுவதுமே கொரோனாவால் திரைத்துறை முடங்கிப் போனது என்றே சொல்ல வேண்டும். தீபாவளி பண்டிகைக்குக் கூட பெரிய பட்ஜெட் படங்களைத் திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்களும் தியேட்டர்காரர்களும் தயங்குகின்றனர். தியேட்டர்களில் சமூக இடைவெளி, பாதிப் பேருக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளிட்ட பல காரணங்களால் பெரிய பட்ஜெட் படங்கள் பெரிய வசூலை எட்டுவது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தத் தயக்கம். சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் தியேட்டர்களை திறந்தபோது […]

நன்றி.. வணக்கம்… எல்லாம் முடிந்தது! – விஜய் சேதுபதி

சென்னை: 800 படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி, ‘நன்றி வணக்கம்’ என்று மட்டும் கூறியுள்ளார். “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சந்தித்தார். முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து விஜய் சேதுபதி ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதல்வர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு விஜய் சேதுபதி […]

‘முத்தையா முரளிதரன் ஒரு இன துரோகி… அவர் வேடத்தில் நீ நடிக்கலாமா விஜய் சேதுபதி?’ – பாரதிராஜா கோப கடிதம்

அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க. தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய […]

க/பெ ரணசிங்கம் – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம் இசை: ஜிப்ரான் இயக்கம்: பெ விருமாண்டி படத்தின் சிறப்பு ஆரம்பித்த சில நிமிடத்திலேயே வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற கதாநாயகன் இறந்துவிட்டதாய் நாயகிக்கு செய்தி வருகிறது. பிறகு நாயகன் நாயகி காதல் கதையின் ஃப்ளாஷ்பேக்குகள் வருவதால் காதல் காட்சிகளின் பலம் இன்னும் நமக்குக் கூடித் தெரிகிறது.. அதன் பிறகு அந்த இறந்த கணவனின் உடலைத் திரும்ப வாங்குவதில் ஆரம்பிக்கிறது சிக்கல். அதன் பிறகு இறந்தவர் குடும்பத்தில் படிப்பறிவு […]

அந்தாதுன் தமிழ் ரீமேக்… பிரசாந்தை இயக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்! – தியாகராஜன் அறிவிப்பு

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜெஜெ பெட்ரிக் இயக்குவார் என நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் அறிவித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான […]