ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது: “தயாரிப்பாளர் குமாருக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இப்போது படப்பிடிப்பு போகலாம், அப்போது போகலாம் என்று காத்திருந்தோம். ஆனால், அனைத்தையும் […]
Category Archives: தமிழ் சினிமா
மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகிறார் அண்ணாத்த!
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே 40 சதவீதம் முடித்து விட்டனர். ஊரடங்கை தளர்த்தியதும் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தபோது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்தனர். ரஜினிகாந்த்துக்கும் கொரோனா சோதனை நடந்தது. அதில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வந்தாலும், அவருக்கு சீரற்ற ரத்த அழுத்தம் நிலவியதால், ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றார். பின்னர் சென்னை […]
கமலி From நடுக்காவேரி!
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது: தயாரிப்பாளர் துரைசாமி: ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார். படத்தின் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி: நான் திருச்சி மாவட்டம் பச்சைமலை அடிவாரம். என்னுடைய வாழ்க்கையில் அனைத்துப் பக்கங்களிலும் […]
காணாமல் போகும் ஸ்டுடியோக்கள் பட்டியலில் பிரசாத் ஸ்டுடியோவும் இணையட்டும்! – இளையராஜா
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, தனது பெயரில் இன்று புதிய ஸ்டுடியோவைத் திறந்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்எம் திரையரங்கை விலைக்கு வாங்கி, அதைப் புதுப்பித்து இளையராஜா ஸ்டுடியோ எனப் பெயர் சூட்டியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பாடல் பதிவு இந்த ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது. புதிய ஸ்டுடியோ திறப்பையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “ஒரு காலத்தில் சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிப் படங்கள் […]
தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி! – பின் வாங்கியது தமிழக அரசு
சென்னை: மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் வெளியாவதால் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஞகொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், திரையரங்கு விவகாரத்தில் குழந்தைகள் போன்று அரசு மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும், பள்ளிகள் மூடியிருக்கும் போது தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதிப்பது சரியல்ல என […]
தியேட்டரிகளில் மாஸ்டர், ஈஸ்வரன்…. தற்கொலைக்கு சமம்!
சென்னை: கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. இதற்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரையுலகை சேர்ந்த அரவிந்த்சாமி, கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரின் சோஷியல் மீடியா போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாக்டர் அரவிந்த் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: […]
‘கொரோனா தொற்றில்லை,,, ரஜினி நலம்!’
ஹைதராபாத்: ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார். இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், படப்பிடிப்பில் 8 […]
நிபந்தனைகளுடன் இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்கத் தயார்! – பிரசாத் ஸ்டுடியோ
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் இடத்தை காலி செய்ய இளையராஜாவை வலியுறுத்தியது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு […]
‘பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை ஒரு நாள் கூட அனுமதிக்க முடியாது!’
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் இடத்தை காலி செய்ய இளையராஜாவை வலியுறுத்தியது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில், இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு மனு […]
இப்போ இல்லைனா எப்பவும் இல்ல’…. கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி!
அந்த பதிவில், “எனது வாழ்விற்கு இனிய பிறந்தநாள், அன்புள்ள அப்பா” என்று எழுதியுள்ளார். அந்த கேக் “நவ் ஆர் நெவர்” அதாவது, ”இப்போ இல்லைன்னா எப்போவும் இல்லை” எனும் எழுத்துவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. “ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்… இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல..” என்ற முழக்கத்துடன் அரசியலில் ரஜினி இறங்கியுள்ளதைக் குறிக்கும் வகையில் இந்த கேக்கை வடிவமைத்துள்ளனர்.