ரஜினியைச் சந்தி8தத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான புத்தகத்தை வழங்கினார். இந்த சந்திப்பு புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டிருப்பதாவது: இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்மபூஷன் ரஜினிகாந்த்தை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட […]

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

  பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ராப்பகலாக நடந்து வருகிறது.. இந்நிலையில் படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் என்ற அறிவிப்புக்கு படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் போஸ்டரில் தேதி மட்டும் இருப்பதால் நேரம் நள்ளிரவு தான் என ரசிகர்களே தீர்மானிக்கத் தொடங்கிவிட்டனர். இந்தப் […]

வீட்டுக்கு அழைத்துப் பாராட்டிய ரஜினி.. நெகிழ்ந்த டிராகன் படக்குழு!

ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, டிராகன் படத்தால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இடத்திற்கு முன்னேறியுள்ளார். கல்லூரியில் ஒழுங்காகப் படிக்காத நாயகன் குறுக்கு வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை கேள்வி கேட்கும்படியான படமாக டிராகன் உருவாகியிருந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆ ச்சர்யப்பட வைத்துள்ளது. சாதாரண கமர்சியல் படம் என்பதைத் தாண்டி, திரை எழுத்தாகவும் பலரின் உணர்வுகளைத் தொட்டதால் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்த […]

400 கோடியைக் கடந்த வேட்டையன்!

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில், த செ ஞானவேல் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் வேட்டையன். அக்டோபர் 10ம் தேதி உலகெங்கும் வெளியான இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. படம் வெளியான 4 நாட்களில் 240 கொடியைக் குவித்தது வேட்டையன். இடையில் மழை குறுக்கிட்டாலும், படத்துக்கு தொடர்ந்து பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதன் விளைவாக உலகெங்கும் இந்தப் படம் 23 நாட்களில் ரூ 400 கோடியை […]

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் வேட்டையன்!

லைகா நிறுவனத் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி இதுவரை ட்ரெண்டிங்கில் உள்ளன. இந்தப் படம் உலகெங்கும் நாளை 7000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் […]

ரஜினிகாந்த்துக்கு என்ன நடந்தது… வீடு திரும்புவது எப்போது?

சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அஙஅகு அவருக்கு சிகிச்சை முடிந்துள்ளது. இப்போது ரஜினி உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. கூலி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், அடிவயிற்றில் வலி மற்றும் லேசான நெஞ்சு வலி காரணமாக திங்கள்கிழமை இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்தார். இதற்கு அவர் ஏற்கெனவே மருத்துவமனையில் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு வழக்கமான சோதனைகள் […]

மூன்றே நாட்கள்… ரூ 450 கோடியை நெருங்கும் கல்கி2898.. அதிரும் பாக்ஸ் ஆபீஸ்!

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் […]

தடகள வீரர்களை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினி

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (மே) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் வெற்றி பெற்ற வீரர்கள் விவரம் எம் செண்பகமூர்த்தி 100mts – 2nd place 200mts- 3rd place Mixed Relay – 1st சுரேஷ் காசிநாதன் 100- 3rd 200- 3rd […]

ரஜினி இரட்டை இலைக்கு வாக்களித்தபோது கலைஞர் அடித்த கமெண்ட்!

சென்னை: ஒரு தேர்தலின் போது தான் இரட்டை இலைக்கு வாக்களித்தது தெரிந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறிய வார்த்தைகளை நடிகர் ரஜினிகாந்த் ‘கலைஞர் 100’ விழாவில் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: […]

ஒரே இடத்தில் தலைவர் 170, இந்தியன் 2… ரஜினிகாந்த் – கமல் ஹாசன் சந்திப்பு!

  முன்பெல்லாம் படப்பிடிப்புத் தளங்களில் இருவேறு படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் சந்திப்பதும், அது பற்றிய புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் தொலைத் தொடர்பு வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க, மனிதர்களுக்கிடையிலான இடைவெளியும் அதிகரித்துவிட்டதால், இந்தத் தலைமுறை நடிகர்களிடம் அத்தகைய சந்திப்புகளைப் பார்க்க முடிவதில்லை. அந்தக் குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார்கள் ரஜினியும் கமலும். லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் […]