தீபாவளிக்கு திரையரங்குகளில் சந்தானத்தின் சிரிப்பு வெடி!

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடமேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜபார்ட் காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றன. அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்திருந்தார். படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, “படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம். சந்தானத்தை வேறு சில பரிமாணங்களை இதில் […]