வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை 2. இப்படத்தின் முதல் பாகம் விடுதலை என்ற பெயரில் வெளியாகி கடந்த ஆண்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்துக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தியா தவிர, உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான […]
Tag Archives: Vijay Sethupathy
RED FLOWER படத்தின் புதிய லுக் போஸ்டர்… வெளியிட்டார் விஜய் சேதுபதி
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் ‘RED FLOWER” ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக விக்னேஷ் நடிக்கின்றார், எழுதி இயக்குகிறார் ஆண்ட்ரூ பாண்டியன்’. தனது வித்தியாச நடிப்பால் ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி “RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டரை வெளியிட்டார். இப்படத்தில் விக்னேஷ் பாத்திரமும் அவரது தோற்றமும் , நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும் என்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன். மீண்டும் ஒரு […]
விடுதலை 2 முதல் தோற்றம்
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது! இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் ஆர்வமாக உள்ளன. இந்த நேரத்தில், விஜய் […]
விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசர்!
நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் நடனப்புயல் பிரபுதேவாவின் அசத்தலான நடனமும் , […]
‘மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைக்கோர்த்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், “எங்களுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நல்ல உறவு […]
மகாராஜா… இப்படியும் ஒரு பார்வை
படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஒரு பக்கம் ஃபீல் குட் பிளாக்பஸ்டர் என டிக்ளேர் செய்துவிட்டார்கள். இன்னொருபக்கம் glorifying extra judicial murders என அதீத அறம் சார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். படத்தில் எனக்கு சிக்கலாக இருந்த இடங்களை பேசிவிடலாம் என நினைக்கிறேன். பாலியல் ரீதியான குற்றங்களை மையப்படுத்தி உலக அளவில் பல படங்கள் வந்து கொண்டிருக்கும் காலமிது. அதிலும் குட் டச் பேட் டச் கூட அறியாத குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை […]
இந்தி படிக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை… திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள்! – விஜய் சேதுபதி அதிரடி
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இத்திரைப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இப்படத்தில் தானே இந்தியில் டப்பிங்கும் பேசியுள்ளார். படம் வெளியாவதையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், விஜய்சேதுபதி, கத்ரீனா ஃகைஃப் உள்ளிட்ட […]
ஒருவழியாக விடுதலைக்கு ‘விடுதலை’ கிடைக்கப்போகிறது!
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ என்ற படத்தை சுில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தனர். சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் வெற்றிமாறன் முதல் முறையாக இணைகிறார் என்ற செய்தி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. குறுகிய காலத் தயாரிப்பாகத்தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது இந்தப் படம். ஆனால் கோவிட், கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே போனது. தற்போது ‘விடுதலை’ படம் இரண்டு […]
‘ஒரு கோடி மட்டுமல்ல…இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி
சென்னையில் நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரிகிரீசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பெஃப்ஸி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக மேன் கைண்ட் ( Man Kind) என்ற நிறுவனம் […]
நன்றி.. வணக்கம்… எல்லாம் முடிந்தது! – விஜய் சேதுபதி
சென்னை: 800 படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி, ‘நன்றி வணக்கம்’ என்று மட்டும் கூறியுள்ளார். “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சந்தித்தார். முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து விஜய் சேதுபதி ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதல்வர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு விஜய் சேதுபதி […]