சென்னை: 800 படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி, ‘நன்றி வணக்கம்’ என்று மட்டும் கூறியுள்ளார்.

“நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சந்தித்தார். முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து விஜய் சேதுபதி ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதல்வர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு விஜய் சேதுபதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் இல்லத்திலிருந்து வெளியில் வந்த விஜய் சேதுபதியிடம் 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை,” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *