“ஒரே ஒரு போன் கால்.. திரும்பி பார்க்க வெச்ச விஜய்ணா”: பன் பட்டர் ஜாம் ஹீரோ பேச்சு

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் […]

‘எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை’! – விஜய் அறிவிப்பு

சென்னை: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் தவெக போட்டியிடாது,” என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் […]

காலை 4 மணிக்கெல்லாம் இல்ல… 9 மணிக்குத்தான் லியோ முதல் காட்சி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்குதான் திரையிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு […]

லியோ… சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி

இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இதில் அஜித்தின் ‘துணிவு’ படத்துக்கான அதிகாலைக் காட்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இதுபோன்ற அசாம்பாவித சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதற்காக தமிழக அரசு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்காமல் இ்ருந்தது. தனுஷின் ‘வாத்தி’, சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ என முன்னணி நட்சத்திரங்களின் எந்தப் படங்களின் சிறப்பு காட்சிகளும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே […]

அஜித்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன விஜய்

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 85. நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறவால் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று காலை காலமானார். நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப […]

திடீர் சந்திப்பு… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

சென்னை: 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் முக ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசனே முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. ரஜினி தரப்பில் இருந்து இன்னும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்து […]

பொங்கலுக்கு மாஸ்டர் உள்பட 4 புதிய படங்கள்!

இந்த ஆண்டு முழுவதுமே கொரோனாவால் திரைத்துறை முடங்கிப் போனது என்றே சொல்ல வேண்டும். தீபாவளி பண்டிகைக்குக் கூட பெரிய பட்ஜெட் படங்களைத் திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்களும் தியேட்டர்காரர்களும் தயங்குகின்றனர். தியேட்டர்களில் சமூக இடைவெளி, பாதிப் பேருக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளிட்ட பல காரணங்களால் பெரிய பட்ஜெட் படங்கள் பெரிய வசூலை எட்டுவது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தத் தயக்கம். சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் தியேட்டர்களை திறந்தபோது […]