சூர்யா 40: பாண்டிராஜ் இயக்குகிறார்!

சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. கொரோனா அச்சம் காரணமாக இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால், இந்த படம் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஆன்லைனில் வருகிற 30-ந்தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் விமானப் படையில் இருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ் தாமதமாக கிடைத்ததால் தள்ளி வைத்துள்ளனர். தீபாவளியையொட்டி ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்து 39-வது படமாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து […]