நடிப்பு: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம் இசை: ஜிப்ரான் இயக்கம்: பெ விருமாண்டி படத்தின் சிறப்பு ஆரம்பித்த சில நிமிடத்திலேயே வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற கதாநாயகன் இறந்துவிட்டதாய் நாயகிக்கு செய்தி வருகிறது. பிறகு நாயகன் நாயகி காதல் கதையின் ஃப்ளாஷ்பேக்குகள் வருவதால் காதல் காட்சிகளின் பலம் இன்னும் நமக்குக் கூடித் தெரிகிறது.. அதன் பிறகு அந்த இறந்த கணவனின் உடலைத் திரும்ப வாங்குவதில் ஆரம்பிக்கிறது சிக்கல். அதன் பிறகு இறந்தவர் குடும்பத்தில் படிப்பறிவு […]