இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், சர்வதேச அளவில் ஆஸ்கார், கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றார். தற்போது அடுத்த கட்டமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், […]
Category Archives: தமிழ் சினிமா
நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு
சென்னை: நடிகர் விவேக் இன்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக அவர் வடபழனியில் உள்ளப தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விவேக் நேற்றுதான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் […]
அருண் விஜய் நடிப்பில் பார்டர்!
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார். ‘AV31’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர […]
கர்ணன் – ஒரு பார்வை
அநீதியால் ஒடுக்கப்பட்ட மனிதக் கூட்டத்தின் கால்களில் கட்டப்பட்டுள்ள விலங்கினை உடைத்தெறிவதின் பின்னால் உள்ள தடைகள், வலி, வெறுப்பு, அழுத்தம், தேவை, யாவற்றுக்குமான நீதியையும் பேசுகிற படம். கலையம்சக் கோட்பாடுகளை மீறி, ரத்தமும் சதையுமான மக்களின் இயல்பான வாழ்வைத் தன் நாட்டாரியல் அறிவுடன் பிரதிபலிக்க முயற்சிக்கிற மாரிசெல்வராஜின் திரைமொழி வியக்க வைக்கிறது. சிலர், அசுரன்- பரியேறும் பெருமாள் படங்களோடு கர்ணனை ஒப்பீடு செய்து பேசும்போது, அவர்களைத் தாண்டி வந்துவிடுகிறேன். காரணம், ஒரு தீவிரமான காலகட்டத்தைத் தன் இளம்பிராயத்தில் கடந்துவந்தவன் […]
ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இந்திய’ னுக்கு தடை!
சின்ன படம், பெரிய படம், இவர் படம், அவர் படம் என்ற பாரபட்சம் இல்லாமல், தன் மனத்துக்குப் பட்டதை, தனக்கே உரிய பாணியில் விமர்சனமாக வைப்பவர் ப்ளூ சட்டை மாறன் எனும் இளமாறன். ‘எங்கள் படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? முடிஞ்சா நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது மாறனுக்கு சவால் விட்டு வந்தனர். ‘அவ்ளோதானே… எடுத்துட்டா போச்சு’ என களத்தில் இறங்கிய மாறன் […]
ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் கர்ணன்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். தனுஷ், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும், முன்னோட்டக் காட்சிகளும் வெளியாகி, பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளன. கொரோனா காலத்துக்குப் பிறகு, ஒரு படத்துக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளதென்றால் அது கர்ணனுக்குத்தான். “இந்த எதிர்ப்பார்ப்பு நாங்களாக வலிந்து உருவாக்கியதில்லை. படத்தின் கதை, இசை. பாடல்கள், நடிகர்கள் தேர்வு என அனைத்தும் சேர்ந்து […]
அன்பிற்கினியாள்… சந்தேகமற்ற வெற்றிப் படம்!
நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில், கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. திரையிடல் நிறைவடைந்த பின் படக்குழுவினர் பேசினார்கள். நடிகர் அருண்பாண்டியன்: “அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண தாமதம். […]
‘கோவிலுக்கு வந்தது போலிருக்கு!’ – இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் ரஜினிகாந்த்
பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, சொந்தமாக ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் அதி நவீன இசைப் பதிவுக் கூடம் அமைத்துள்ளார் இளையராஜா. தனது புதிய படங்களின் இசைக் கோர்ப்புப் பணிகளை இங்குதான் மேற்கொண்டு வருகிறார் இசைஞானி. இந்நிலையில் நேற்று காலை இளையராஜாவின் தி நகர் வீட்டுக்கு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். இளையராஜாவுடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய ரஜினி, இளையராஜாவின் சொந்த ஸ்டூடியோவுக்கு அவருடன் சென்றுள்ளார். ஸ்டூடியோவை சுற்றிப் பார்த்து வியந்த ரஜினி, ‘கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு […]
வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் சிலர் செய்யம் செயல்கள் வருத்தமுற செய்கிறது! – நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை
சென்னை: அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் சமீப காலமாக வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர். அஜித் இப்போது நடித்து வரும் வலிமை படத்தின் புதிய தகவல்களை வெளியிடக் கேட்டு சமூக வலைத் தளங்களில் விதவிதமாக பதிவுகள் இட்டு வருகின்றனர். சமீபத்தில் ஒருபடி மேலே போய், தமிழக முதல்வர், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தமிழகம் வந்த பிரதமர் மோடி போன்றவர்களிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அலப்பறை செய்தனர் இந்த ரசிகர்கள். இதனால் கடுப்பாகிப் போன நடிகர் […]
முடிந்தது டப்பிங்… ஏப்ரலில் கர்ணன்!
தனுஷின் 41-வது படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்ணன் படத்திற்காக தனுஷ் டப்பிங் செய்த புகைப்படத்தை படக்குழு நேற்று […]