இந்த சாதிச் சனியனால் என்ன சாதிக்கப் போகிறோம்! – தமிழருவி மணியன்

மனிதர்கள் யாரும் இந்த நாட்டில், இந்த ஊரில், இந்த சாதியில், இன்னாருக்குப் பிறக்க வேண்டும் என்று இறைவனிடம் மனுப்போட்டு வந்து சேரவில்லை. இந்த சாதிச் சனியனை ஏன் நம்மால் முற்றாகப் புறம் தள்ள முடியவில்லை என்பதை இன்றுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் அறிவுறுத்தி என்ன பயன்? ஆண் என்றும் பெண் என்றும் சாதி இரண்டன்றி வேறில்லை என்று ஒளவை அழுத்தமாகத் தெளிவுபடுத்திய பின்பும் நமக்கு ஏன் […]

இளையராஜா இசையில் ‘தேசிய தலைவர்’

மறைந்த மக்கள் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ எனும் பெயரில் படமாகிறது. இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் இந்தப்படத்திற்காக 48 நாட்கள் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார். மறைந்த பிரபல நடிகரும் பசும்பொன் தேவருடன் […]

‘மிகமிக கனமழை’ – இந்திய வானிலை மையம்

டெல்லி: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையைக் கடந்த நிலையில், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு இன்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காகிநாடாவில் கரையைக் கடந்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் லோசான மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், தெலுங்கானாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை […]

அதிபர் ட்ரம்புக்கு கொரோனா ‘நெகடிவ்’!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியில் அந்நாட்டில் வரும் நவம்பர் 3ம்தேதி அதிபர் தேர்தலும் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்காக ட்ரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டநிலையில், அதிபரின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை […]

குஷ்புவால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை! – காங்கிரஸ்

சென்னை: குஷ்பு விலகியதால் கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, சில மாதங்களாகவே பாஜகவுக்கு சாதகமான கருத்துக்களைக் கூறிவந்தார். இந்த நிலையில் நேற்று அவர் பாஜகவில் இணைந்தார். இது சமூக வலைத் தளங்களில் பரபரப்பாகவும், கிண்டலாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஷ்பு பா.ஜ.க.வில் சேருவதற்கு அவரது […]

தமிழக முதல்வர் பழனிசாமி தாயார் காலமானார்

சிலுவம்பாளையம்: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் (93), உடல்நலக் குறைவால் காலமானார். வயது மூப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தவுசாயி அம்மாள் உயிர் பிரிந்தது. தகவல் அறிந்ததும், தூத்துக்குடியில் கொரோனா ஆய்வுப் பணிகளில் இருந்த முதல்வர் பழனிசாமி உடனடியாக சாலை மார்க்கமாக காரில் சேலம் புறப்பட்டுச் சென்று, தாயார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் […]

ஐபிஎல் 2020: சென்னை அணிக்கு 5வது தோல்வி!

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியிடமும் தோல்வியை தழுவியது. ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு துபாயில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக கேதர் ஜாதவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் சேர்க்கப்பட்டார். இதில் ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய […]

‘எங்க நாட்ல ஒருத்தருக்குக் கூட கொரோனா தொற்று இல்ல!’ – வட கொரிய அதிபர்

பியாங்யாங்: வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பேசியுள்ளார். வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டத்தில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதன்பின்னர் கிம் கூடியிருந்த பார்வையாளர்களின் முன் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, “கொரோனா வைரசின் பாதிப்புக்கு ஒருவர் கூட ஆளாகாமல் நல்ல உடல் ஆரோக்கியமுடன் மக்கள் இருப்பதற்காக அவர்களுக்கு […]

மன்னிச்சுக்கங்க பாரதிாஜா சார்…! – இரண்டாம் குத்து இயக்குநரின் பகிரங்க கடிதம்

இரண்டாம் குத்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் ட்விட்டரில், சாதனை இயக்குநர் பாரதிராஜா குறித்து தவறாக வெளியிட்ட பதிவுக்கு மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார். சந்தோஷ் ஜெயக்குமார் என்பவர் இயக்கியுள்ள ‘இரண்டாம் குத்து’ படத்தின் ட்ரெய்லர், போஸ்டர் ஆகியவை சில தினங்களுக்கு முன் வெளியாகின. இவை ஆபாசக் குவியலாக இருப்பதாகக் கூறி, இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை ஊடகங்களில் வெளியானதும், இரண்டாம் குத்து இயக்குநர், பாரதிராஜா இயக்கிய டிக்..டிக்..டிக்.. படத்தின் […]

5 மொழிகளில் 9 திரைப்படங்கள்… வெயிட்டாக களமிறக்கும் அமேசான் பிரைம்!

மும்பை: தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் 9 படங்களை ப்ரைம் வீடியோவில் வெளியிட உள்ளது அமேசான் தளம். வருண் தவான் மற்றும் சாரா அலி கான் நடித்த கூலி நம்பர் 1, ராஜ்குமார் ராவ் நடித்த சலாங், பூமி பெட்னேக்கரின் துர்காவதி, ஆனந்த் தேவரகொண்ட நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு), மாதவன் நடித்த மாரா (தமிழ்), பீமா சேனா நளமகாராஜா மற்றும் ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்), […]