அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க. தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய […]
Author Archives: Dhina Cheithi
க/பெ ரணசிங்கம் – விமர்சனம்
நடிப்பு: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம் இசை: ஜிப்ரான் இயக்கம்: பெ விருமாண்டி படத்தின் சிறப்பு ஆரம்பித்த சில நிமிடத்திலேயே வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற கதாநாயகன் இறந்துவிட்டதாய் நாயகிக்கு செய்தி வருகிறது. பிறகு நாயகன் நாயகி காதல் கதையின் ஃப்ளாஷ்பேக்குகள் வருவதால் காதல் காட்சிகளின் பலம் இன்னும் நமக்குக் கூடித் தெரிகிறது.. அதன் பிறகு அந்த இறந்த கணவனின் உடலைத் திரும்ப வாங்குவதில் ஆரம்பிக்கிறது சிக்கல். அதன் பிறகு இறந்தவர் குடும்பத்தில் படிப்பறிவு […]
ராகவேந்திரா மண்டப சொத்துவரி விவகாரம்: வழக்கை வாபஸ் வாங்கினார் ரஜினி
சென்னை: கொரோனா பொது முடக்க காலத்தில் திறக்கவே இல்லாத தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட 6.50 லட்சம் சொத்து வரியை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரை ஆண்டு காலத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த சொத்து வரிக்கு எதிரான இந்த வழக்கு, இன்று புதன்கிழமை நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில், தனது ஆலோசகர் […]
‘இன்னும் என்னென்ன துரோகங்களைச் செய்யப் போகிறதோ அதிமுக அரசு!’ – முக ஸ்டாலின்
சென்னை: பதவிக்காக – ஊழலுக்காக, ‘நீட் தேர்வில்’ தமிழகக் கல்வி உரிமையைப் பறி கொடுத்தது போல், இப்போது மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது அதிமுக அரசு என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களில், தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க […]
ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!
துபாய்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது. 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 29-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஹைதராபாத் சன்ரைசர்சும் இரண்டாவது முறையாக மோதின. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக தமிழக வீரர் ஜெகதீசன் நீக்கப்பட்டு சுழற்பந்து […]
‘கொரோனா… இனிமேல்தான் ஆபத்து ரொம்ப அதிகம்!’ – பிரபல மருத்துவர் எச்சரிக்கை
உலகெங்கும் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பது போல் செய்திகள் வருகின்றன. நம்மில் பலரும், உற்றார் உறவினர் இதனால் பாதிக்கப்பட்டதைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறோம். மக்களிடம் எச்சரிக்கை உணர்வு குறைந்து, அலட்சியம் கூடி வருகிறது… இன்னும் ஒரு மாதத்தில் இதன் தீவிரம் கூடும் அபாயம் இருக்கிறது. பல மருத்துவர்கள், தொலை-சிகிச்சை முறையில் இணைய-கணினி வழியாகவே பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து, பேசி, சிகிச்சைகள் பரிந்துரைக்கிறார்கள். என்னால் அது முடியவில்லை. என்னிடம் வருபவர் எப்படி உள்ளே நுழைகிறார் என்பதிலிருந்து நான் சொல்வதற்கு என்ன […]
கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பரிசோதனையை நிறுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனைகளை முடித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் 3-ம் கட்ட பரிசோதனையை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது, தடுப்பூசி […]
அந்தாதுன் தமிழ் ரீமேக்… பிரசாந்தை இயக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்! – தியாகராஜன் அறிவிப்பு
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜெஜெ பெட்ரிக் இயக்குவார் என நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் அறிவித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான […]
நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது, விஜயகாந்த் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த அதே நபர் தான் தனுஷ் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்துள்ளார் […]
‘சச்சின் 10ம் வகுப்புதான் படித்தார்… அதற்காக அவருக்கு பியூன் வேலை கொடுப்பீங்களா?’ – உயர் நீதிமன்றம்
மதுரை: 10ம் வகுப்பு படித்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு, பரிசுகளை வழங்குகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த […]