இந்த சாதிச் சனியனால் என்ன சாதிக்கப் போகிறோம்! – தமிழருவி மணியன்

மனிதர்கள் யாரும் இந்த நாட்டில், இந்த ஊரில், இந்த சாதியில், இன்னாருக்குப் பிறக்க வேண்டும் என்று இறைவனிடம் மனுப்போட்டு வந்து சேரவில்லை. இந்த சாதிச் சனியனை ஏன் நம்மால் முற்றாகப் புறம் தள்ள முடியவில்லை என்பதை இன்றுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் அறிவுறுத்தி என்ன பயன்? ஆண் என்றும் பெண் என்றும் சாதி இரண்டன்றி வேறில்லை என்று ஒளவை அழுத்தமாகத் தெளிவுபடுத்திய பின்பும் நமக்கு ஏன் […]

தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தப்பட்ட தலித் பெண் தலைவர் – தலைவிரித்தாடும் சாதிக் கொடுமை

கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்துள்ளபோது தலித் பெண் ஊராட்சி தலைவர் மட்டும் தரையில் அமர்ந்துள்ள படமும் வெளியாகியுள்ளது. ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான தம்மை, துணைத் தலைவர் தரையில் அமர வைத்து சாதிக் கொடுமைக்கு உள்ளாக்குவதாக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியத்தில் தெற்கு திட்டை […]