வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். ஆனால் இப்போதைய அதிபரான டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். இந்தத் தேர்தலில் மோசடி நடந்துவிட்டதாக தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிபர் டிரம்ப் தேர்தலை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். பல குடியரசுக் கட்சியினர் சட்ட முயற்சிகளுக்கு ஆதரவளித்துள்ளனர், ஆனால் டிரம்ப்பின் இந்த முடிவு கட்சிக்குள் ஒரு […]
Author Archives: Dhina Cheithi
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: தேனாண்டாள் முரளி வெற்றி!
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கினார். இதுதவிர துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 1050 பேர் மட்டுமே ஓட்டுப் போட்டனர். இந்நிலையில், தயாரிப்பாளர் […]
உருவாகுது நிவர் புயல்… அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கிலோமீட்டர், புதுச்சேரியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. […]
95 சதவீதம் பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து…. அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அவற்றில் ரஷ்யா முதல் முறையாக கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து, அதைப் பயன்பாட்டுக்கும் விட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீத அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது மாடர்னா நிறுவனம் தனது புதிய தடுப்பு மருந்தினை அறிவித்துள்ளது. இது தங்களுக்கு `சிறந்த ஒரு […]
தமிழகம் முழுவதும் அடித்து ஊற்றும் பெருமழை!
சென்னை: தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டன. மதுரை, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, ஏழுமலை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. திருச்சி: லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, சமயபுரம்,மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. நாமக்கல்: ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், ஆண்டகளூர்கேட், அத்தனூர் பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடுதுறை: சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, […]
சூரரைப் போற்று – விமர்சனம்
நடிகர்கள்: சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல், மோகன் பாபு ஒளிப்பதிவு: நிகேத் பொம்மிரெட்டி இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: 2டிஎன்டர்டெயின்மென்ட் இயக்கம்: சுதா கொங்கரா பணக்காரர்களுக்கு மட்டுமே வசப்பட்டுக் கொண்டிருந்த விமானப் பயணத்தை. சாமானிய மக்களுக்கும் சாத்தியமாக்கிக் காட்டிய ஒரு சாதனையாளரின் உண்மைக் கதைதான் சூரரைப் போற்று. கொஞ்சம் பிசகினாலும் வெறும் டாகுமென்டரியாகப் போயிருக்கும் வாய்ப்புள்ள ஒரு கதையை, சுவாரஸ்ய சினிமாவாக்கி ஜெயித்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. ரயில்கள் கூட நிற்காமல் செல்லும் சோழவந்தான் […]
பள்ளிகள் திறப்பு…. டிசம்பருக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாமே… – அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
மதுரை: கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடிக் கிடக்கின்றன பள்ளி, கல்லூரிகள். வரும் நவ.16ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் மத்தியில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. போக்குவரத்து முழுமையாக இயங்காத நிலையில் மாணவர்கள் வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே, நவ. 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் […]
தீபாவளிக்கு திரையரங்குகளில் சந்தானத்தின் சிரிப்பு வெடி!
இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடமேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜபார்ட் காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றன. அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்திருந்தார். படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, “படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம். சந்தானத்தை வேறு சில பரிமாணங்களை இதில் […]
அமெரிக்காவின் கொரோனா தடுப்புக் குழுவில் இடம்பெற்ற தமிழர்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அங்கு தற்போதைய முக்கிய பிரச்சினையாக உள்ள கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக, கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். 13 பேர் கொண்ட இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் விவேக் மூர்த்தி இடம் பிடித்துள்ளார். இதே குழுவில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் மருத்துவரான செலின் ராஜ் இடம்பிடித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்க்குறிச்சியைச் சேர்ந்த ராஜ் நடராஜன் என்பவரின் மூத்த மகளான செலின் ராஜ், […]
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்… பாஜகவை பின்னுக்குத் தள்ளும் லாலுபிரசாத் கட்சி!
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டன. இன்று நடக்கும் வாக்கு என்ணிக்கையில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி பின்தங்கி தற்போது பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது. பீகார் தேர்தலில் எந்தக் கட்சி பெரும்பான்மை கிடைக்கும் என என்பதில் இன்னும் சரியான நிலவரம் தெரியவில்லை. பெரும்பான்மை விவகாரத்தில் முன்னும் பின்னுமாக […]