தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை!

சென்னை: வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால், மார்ச் 18 மற்றும் மார்ச் 19 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 21 […]

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை! – வானிலை

சென்னை: குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 […]

தமிழகத்தில் தொடரும் மழை… சென்னை, புறநகரில் விடிய விடிய கொட்டியது!

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் நிரவ் மற்றும் புரெவி புயல்களால் கடந்த நவம்பர் மாதத்தில் நல்ல மழைப் பொழிவு இருந்தது. புயல்கள் ஓய்ந்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடர்கிறது, சென்னையில் அடையாறு, கிண்டி, தி.நகர். கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு தொடங்கிய […]

உருவாகுது நிவர் புயல்… அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கிலோமீட்டர், புதுச்சேரியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. […]

சிலு சிலு காத்து… ஜில்லுன்னு மழை… குளுகுளு தமிழகம்!

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வட கிழக்குப் பருவமழை நேற்று இரவு தொடங்கியது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிகக் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் விடிய, விடிய இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் […]