லாபத்துடன் தொடங்கிய ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்’ பங்கு விற்பனை!

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் அண்மையில் பட்டியலிடப்பட்டிருகிறது. இதற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு சந்தை […]

செங்களம்… ஜீ 5-ன் புதிய தொடர் மார்ச் 24 முதல்!

தமிழ் ஓடிடி தளங்களில் பல வெற்றிப் படைப்புகளை தந்து வரும் ஜீ5-ன், அடுத்த படைப்பாக வெளிவருகிறது ‘செங்களம்’ இணையத் தொடர். அபி & அபி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின் முன்னோட்டம் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் ஜீ5 நிறுவன அதிகாரிகள் […]

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை!

சென்னை: வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால், மார்ச் 18 மற்றும் மார்ச் 19 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 21 […]

முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த், இளையராஜா!

  சென்னை: தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மார்ச் 1-ம் தேதி வியாழன் கிழமை தனது 70 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு ஒரு நாள் முன்பாகவே வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது: “எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட […]

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணம்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார். 1984-முதல் சிறு சிறுவேடங்கள் மற்றும் நகைச்சுவை, குண்ச்சித்திர கதாப்பாத்திரங்களில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் மயில்சாமி நடித்துள்ளார். 80களின் இறுதியில் வெளியான அவரது சிரிப்போ சிரிப்பு நகைச்சுவை ஒலிநாடா மிகப் புகழ் பெற்றது. விவேக், வடிவேலு உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் மயில்சாமி நடித்த […]

அதானியைப் பாதுகாக்கிறது மோடி அரசு! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குடியரசுத் தலைவரின் உரை வழிகாட்டியாக இருக்கிறது. தொலைநோக்கு சிந்தனையுடனான உரையை அவர் வழங்கினார். சுதந்திர இந்திய வரலாற்றில் 2004-2014 அடங்கிய பத்தாண்டுகாலம் ஊழல்கள் நிறைந்தது. நாடு முழுவதும் அந்தப்பத்தாண்டுகளில் நாட்டில் ஆங்காங்கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான […]

இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்து, டெல்லி திரும்பினார் ராகுல் காந்தி!

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை நேற்று ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைந்தது. 4 ஆயிரம் கிலோ மீட்டரை நடந்தே கடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ […]

விஜய் சேதுபதியின் பெருந்தன்மை! – மைக்கேல் இயக்குநர் நெகிழ்ச்சி

மைக்கேல் படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இந்த நிகழ்வில், தயாரிப்பாளர் சிவி குமார் பங்கேற்றுப் பேசுகையில், “படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்,” என்றார். தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில், “சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது […]

ரஜினியின் ஜெயிலரில் தமன்னா!

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இப்படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கிறார். அவர் எதிர்மறை நாயகனாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் நடிக்கும் தகவலை […]

திரைப்படத்துறையில் ரூ 3000 கோடி முதலீடு… ஹோம்பாலே நிறுவனத்தின் புத்தாண்டு அறிவிப்பு!

‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்து, அவற்றை அனைத்திந்தியப் படங்களாக வெளியிட்டு பெரும் வெற்றியடைந்த நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு: “ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், […]