உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர். சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை […]
Author Archives: Dhina Cheithi
அடுத்தடுத்து 3 படங்களில் நாயகன்… ரஜினி பாராட்டு… உச்ச மகிழ்ச்சியில் சூரி!
சந்தானம், யோகி பாபு என நகைச்சுவை நடிகர்கள் பலர் கதாநாயகனாக நடிக்கிறார்கள். இப்போது சூரியும் ‘விடுதலை’ படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதுகுறித்து சூரி அளித்துள்ள பேட்டியில், “நான் நகைச்சுவை நடிகராக வளர்ந்த பிறகு சில இயக்குநர்கள் என்னைக் கதாநாயகனாக நடிக்க வைக்க கதை சொன்னார்கள். அதுவும் நகைச்சுவைக் கதைகளாகவே இருந்தன. மற்ற நடிகர்கள் படங்களில் காமெடி வேடங்களில்தானே நடிக்கிறேன் என்று சொல்லி […]
மன்னிப்புக் கேட்க நான் சாவர்க்கர் அல்ல… காந்தி! – ராகுல் காந்தி
டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. பாராளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய எனது பேச்சுகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. பாராளுமன்றத்தில் என்னைப்பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். பாராளுமன்றத்தில் அதானி […]
பெங்களூரு உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகும் கேடி – தி டெவில்
நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில், பிரமாண்டமான பான் – இந்திய ஆக்சன் படமாக உருவாகும் ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பாலிவுட் பவர்ஹவுஸ் ஸ்டார் ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இந்த பான்-இந்தியா திரைப்படத்தில் சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் துருவா சர்ஜாவுடன், […]
‘தீராக் காதல்’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!
நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் தோற்ற வடிவம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]
என்ன செய்யப் போகிறார் ராகுல் காந்தி?
டெல்லி: பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பில் இருந்து ராகுல் காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவதூறு வழக்கில் குஜராத் உள்ளூர் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நாடாளுமன்ற செயலகம் தடாலடியாகப் பறித்துள்ளது. இந்த நடவடிக்கை, நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளில் இருந்து (மார்ச்.23) அமலுக்கு வந்துள்ளது. இதில் ராகுல் காந்திக்கு சட்ட நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுல் காந்திக்கு தண்டனை காலமான […]
‘ராகுல் காந்தியின் பதவி பறிப்பு’ பாராட்டி வரவேற்போம்!
2019 ஆம் ஆண்டு, கர்நாடகத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய போது, லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார் என்பதைக் காரணம் காட்டி குஜராத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. எனினும் மேல் முறையீட்டிற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளித்து, நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அந்த ஒரு மாதம் கூட காத்திருக்கப் பொறுமை இல்லாமல், ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் […]
செங்களம் (இணையத் தொடர்) விமர்சனம்
நடிகர்கள்: கலையரசன், வாணி போஜன், ஷாலி நிவேகாஸ், விஜி சந்திரசேகர் இசை – தரண்குமார் தயாரிப்பு – அபி அன்ட் அபி என்டர்டெயின்மென்ட் இயக்கம் – எஸ்ஆர் பிரபாகரன் வெளியீடு: ஜீ5 சுந்தரபாண்டியன் பட புகழ் எஸ்ஆர் பிரபாகரன் முதல் முறையாகக இயக்கியிருக்கும் இணையத் தொடர் செங்களம். சற்று மெதுவாக ஆரம்பித்து பரபர அரசியல் த்ரில்லராக முடிகிறது இந்தத் தொடர். கதை இதுதான். விருதுநகர் நகராட்சியின் தலைவர் பதவியை 40 ஆண்டுகளாக தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளது […]
பருந்தாகுது ஊர்க்குருவி பட விமர்சனம்
நடிகர்கள்: விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, காயத்ரி இசை: ரஞ்சித் உன்னி தயாரிப்பு: லைட்ஸ் ஆன் மீடியா இயக்கம்: தனபாலன் கோவிந்தராஜ் ஒரு அரை மணி நேர குறும்படத்தை 2 மணி நேர பெரும்படமாக எடுத்திருக்கிறார்கள். உயிருக்குப் போராடும் ஒருவரைக் காப்பாற்ற அவருடன் காடு முழுக்க ஓடிக் கொண்டே இருக்கிறார் நாயகன். இதுதான் ஒருவரிக் கதை. நிஷாந்த் ரூசோ ஒரு சின்ன குற்றவாளி. காட்டில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதாக காவல் அதிகாரிகளுக்கு தகவல் வருகிறது. உடனே ரூசோவைக் […]
அஜித்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன விஜய்
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 85. நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறவால் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று காலை காலமானார். நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப […]