மறுவெளியீட்டில் வரலாறு படைத்த ரஜினியின் பாபா!

ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்து நடித்த படம் பாபா. இந்தப் படம் ரஜினியைப் பொறுத்தவரை அவரது மனதுக்கு மிக நெருக்கமான படம். அவரது அரசியல், ஆன்மீக நிலைப்பாட்டை அழுத்தமாகச் சொன்ன படம். 2002-ல் இந்தப் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியானது. ஆனால் அரசியல் சூழ்ச்சி, மீடியாவின் ஒருதலைப்பட்சமான விமர்சனங்கள் காரணமாக எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் 107 அரங்குகளில் 50 நாட்களும், 25-க்கும் அதிகமான திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் ஓடி சாதனைப் படைத்தது பாபா. […]

ஏஆர் ரகுமான் இயக்கிய படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி!

  சென்னை: ஆஸ்கர் நாயகன் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார். முன்னதாக ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி, இசையமைத்திருந்தார். அதே போல் ‘லி மஸ்க்’ என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், மெய்நிகர் உண்மை என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மெய்நிகர் உண்மை மூலம் […]

கேஜிஎஃப், காந்தாரா வரிசையில் சேருமா விஜயானந்த்?

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேசுவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் […]

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்!

  வதந்தி தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 2 ஆம் தேதி இந்தத் தொடர் உலகமெங்கும் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் தொடர்ந்து ஒளிபரப்பாக இருக்கிறது. முன்னதாக அண்மையில் நடந்து முடிந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடலாக ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ காட்சிப்படுத்தப்பட்டது. ஆசியாவின் பிரம்மாண்ட திரை விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘வதந்தி’ வெப் சீரிஸுக்கு அரங்கம் அதிரும் வரவேற்பு கிட்டியது. […]

இனப்பகைவர்கள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ இடம் தரக்கூடாது!

  சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், எதிரிகள் நமக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டு பொல்லாங்குகளையும், பச்சைப் பொய்களையும் பரப்புவார்கள் என்றும், உண்மைகள் நம் பக்கம் இருப்பதால், அந்த பொய்களை பொடிப்பொடியாக தூக்கி எறிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். எதிரிகள் நமக்கு எதிராக வெற்று வதந்திகளை கிளப்புவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், அவற்றை நொறுக்கும் விதமாக நம்மிடம் குவிந்துள்ள சாதனை திட்டங்களை முன்வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தேநீர் கடை, திண்ணை பிரச்சாரம் […]

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் முதல் தோற்றம்… வெளியிட்டார் உதயநிதி!

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் தோற்ற வடிவமைப்பு வெளியாகியுள்ளது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘கத்துக்குட்டி’ , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். […]

ஒரு மறுவெளியீட்டுப் படத்துக்கு நள்ளிரவு, அதிகாலை சிறப்புக் காட்சிகள்… அதான் நம்ம பாபாவின் சிறப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2002-ல் வெளியான பாபா படம், மீண்டும் புதுப் பொலிவுடன் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்துக்கு சமீப காலமாக, சமூக ஊடகங்களில் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு மிகவும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான 12.12.2022 அன்று ஒரே ஒரு காட்சியாகத் […]

கட்டா குஸ்தி முன்னோட்டம்

கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி இணையாக நடித்துள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஷாலும், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் ‘மட்டி குஸ்தி’ என்கிற பெயரில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது […]

பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்தத் தடை! – தமிழக அரசு

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆர்எஸ்எஸ்-ஸின் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய மகளிர் அணிச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதனடிப்படையில், ஆர்எஸ்எஸ்-ஸின் […]

‘வதந்தி… உண்மை நடக்கும் ; பொய் பறக்கும்’! – எஸ் ஜே சூர்யா

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் […]